ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
BIG STORIES
“மழையில் நனைய விடலயே” 8 குட்டிகளுக்காக படியேறி உதவிக் கேட்ட நா(தா)ய்...! அம்மான்னா சும்மா இல்லடா..
Nov 07, 2025 01:26 AM
288
“மழையில் நனைய விடலயே” 8 குட்டிகளுக்காக படியேறி உதவிக் கேட்ட நா(தா)ய்...!
திருவண்ணாமலை மாவட்டம் சென்னாவரத்தில் புதருக்குள் 8 குட்டிகளை ஈன்ற நாய், மழையில் குட்டிகள் நனைவதை பொறுக்க முடியாமல் ஒரு வீட்டின் படியேறிச் சென்று உதவி கோரியது தாய்மைக்கு மேலும் ஒரு அடையாளமாக மாறி உள்ளது.
தெருவில் செல்லும் பெண்ணின் பின்னாலேயேச் செல்லும் இந்த நாய் அவரிடம் தனது குட்டிகளை காக்க உதவி கோரியது என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அதுதான் உண்மை. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் நடந்தது இந்த தாயின் பாசப்போராட்டம்..!
சென்னாவரத்தில் மழை பெய்து கொண்டிருந்த நேரம், சாலையில் செல்வோரை எல்லாம் பின்தொடர்ந்துச் சென்று நாய் ஒன்று, புதர்பகுதியை நோக்கி குரைத்து உதவி கோரியது. நாயின் கோரிக்கையை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.
மழையும் நீடிக்க தொடங்கியதால் புதருக்குள் சென்று பச்சிளம் குட்டி ஒன்றை வாயில் கவ்விக் கொண்டு சில வீடுகளின் முன் சென்று காலால் இரும்பு கேட்டை தட்டித் தட்டிப் பார்த்தது அந்த நாய்
இதனை பார்த்துக் கொண்டிருந்த அப்பகுதிவாசியான முஜிபர் என்பவர், அங்கு ஆள் இல்லாமல் பூட்டப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டின் முன்பக்க கேட்டை திறந்து விட்டார்.
உடனடியாக தனது குட்டிகளில் ஒன்றை அங்கு பாதுகாப்பாக வைத்து விட்டு, மற்றொரு குட்டியையும் பாதுகாப்பாய் கவ்வி தூக்கி வந்தது அந்த தாய்
தாயை பின் தொடர்ந்துச் சென்ற முஜிபர் அங்கு மேலும் 5 குட்டிகள் இருப்பதை பார்த்தார். உடனடியாக, பிளாஸ்டிக் சாக்குப் பை ஒன்றை எடுத்து வந்து 5 நாய்களையும் பாதுகாப்பாக அதில் வைத்து தூக்கி வீட்டுக்குள் கொண்டு வந்தார்
தனது குட்டிகளை ஒருவர் தூக்கிச் செல்கிறாரே என அந்த தாய் பார்த்தததும், அதனை உணர்ந்துக் கொண்ட முஜிபர், பையில் வைத்திருந்த குட்டிகளை நாயிடம் காட்டி வா போகலாம் என்றதும் பின்னாலேயே ஓடி வந்தது அந்த தாய் .
அனைத்து குட்டிகளும் பத்திரமாக வந்து சேர்ந்து விட்டது என்பது தெரிந்ததும் அதற்கு பாதுகாவலாக அரவணைத்து படுத்துக் கொண்டது அந்த தாய்.
குட்டிப் போட்ட நாய் பசியோடு இருக்கும் என்பதால் அதேப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கிண்ணத்தில் பால் மற்றும் பிஸ்கெட் எடுத்து வந்து அந்த தாய் நாயின் அருகில் வைத்தார்.
மழை பலமாக பெய்தால் அங்கு தேங்குகின்ற மழை நீரில் தனது குட்டிகள் உயிரிழந்து விடுமே என்று முன்னெச்சரிக்கையாக, தன்னுடைய குட்டிகளை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று தவித்த அந்த தாய் நாயின் பாசப் போராட்டம் தாய்மைக்கு மட்டுமல்ல, பெரு மழைவரும் முன்பாக தாயுள்ளத்தோடு அரசு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிக்கும் ஒரு எடுத்துக்காட்டு..!
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu