RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

BIG STORIES

ஈரான் தலைநகரில் குண்டுமழை.. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்... ஈரானும் பதிலடி தாக்குதல்

Mar 01, 2026 02:00 AM

153

ஈரான் தலைநகரில் குண்டுமழை.. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்... ஈரானும் பதிலடி தாக்குதல்

ஈரான் தலைநகரில் குண்டுமழை.. அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்... ஈரானும் பதிலடி தாக்குதல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது மிகப்பெரும் தாக்குதலை தொடுத்துள்ளன. ஈரானும் பதிலடி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதால் மத்திய கிழக்கில் போர் வெடித்துள்ளது.

அணு ஆயுதம் தயாரிக்கும் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியதை அடுத்து இரு தரப்பிலும் கடந்த சில நாட்களாக பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. இதில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் இன்று காலை ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.
 
இஸ்ரேல் தாக்குதலை தொடங்கிய சில நிமிடங்களில் அமெரிக்க போர் விமானங்கள் ஈரானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசின.
தலைநகர் டெஹ்ரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமைரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. ஈரானின் உச்ச தலைவர் கமேனியின் வீடு, அலுவலகம், ராணுவ அமைச்சக அலுவலகம், உளவுத்துறை தலைமையகம், அணுசக்தி கட்டமைப்புகள் மீதும் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன. அத்தோடு அதிநவீன ஏவுகணைகளும் ஈரான் தலைநகரை நோக்கி வீசப்பட்டன.

 மத்திய கிழக்கு நாடுகளின் உள்ள தங்கள் நாட்டு ராணுவ தளங்களில் இருந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானை சுற்றி வளைத்து அமெரிக்க போர் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன. அந்த கப்பல்களில் இருந்து போர் விமானங்கள் ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குள் நுழைந்து குண்டுகளை வீசி வருகின்றன

தாக்குதலை அடுத்து ஈரான் தலைவர் கமேனி மற்றும் அதிபர் பெசஸ்கியான் ஆகியோர் பதுங்கு குழிக்குள் சென்று உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. ஈரான் படையின் மூத்த கமாண்டர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாக்குதலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அணு ஆயுத அச்சுறுத்தலில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்கவே ஈரான் மீது தாக்குதல் என தெரிவித்தார். ஆயுதங்களை கீழே போடும் ஈரான் துருப்புகளுக்கு மன்னிப்பு வழங்கப்படும் என்று குறிப்பிட்ட டிரம்ப், ஆயுதங்களை கைவிடாவிட்டால் மரணம் நிச்சயம் என்று எச்சரித்தார்.

இதனிடையே இஸ்ரேல் மீது ஈரானும் பதில் தாக்குதல் தொடுத்தது. இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறி வைத்து ஈரான் சுமார் 400 ஏவுகணைகளை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு தடுத்து அழித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் அணு ஆயுதங்கள் உருவாக்குவதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, அமெரிக்காவுடன் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாக அறிவித்தார். ஈரான் மீதான தாக்குதலுக்கு சிங்கத்தின் கர்ஜனை என்று பெயரிட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies