RECENT NEWS

திருத்தணி முருகர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி வழிபாடு

திருத்தணி முருகர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி வழிபாடு

Feb 28, 2026

திருத்தணி முருகர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி வழிபாடு

திருத்தணி முருகர் கோவிலில் ஐஸ்வர்யா ரஜினி வழிபாடு

Feb 28, 2026

BIG STORIES

டிசம்பரில் விவாகரத்து மனு இப்ப அம்பலமானது எப்படி ?விஜய்யின் சுகர் பேபி ஷாக்..! சங்கீதா லைஃப்.. தக் லைஃப்பான சோகம்

Feb 28, 2026 02:31 AM

15

டிசம்பரில் விவாகரத்து மனு இப்ப அம்பலமானது எப்படி ?விஜய்யின் சுகர் பேபி ஷாக்..! சங்கீதா லைஃப்.. தக் லைஃப்பான சோகம்

டிசம்பரில் விவாகரத்து மனு இப்ப அம்பலமானது எப்படி ?விஜய்யின் சுகர் பேபி ஷாக்..! சங்கீதா லைஃப்.. தக் லைஃப்பான சோகம்

நடிகர் விஜய், நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ள அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தக்கல் செய்துள்ளார். டிசம்பரில் தாக்கல் செய்த மனு பிப்ரவரியில் வெளியான பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு.

25 வயதில் மகன் இருக்கும் நிலையில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி உள்ள அவரது மனைவி சங்கீதா, தனது கணவர் விஜய் மீது அடுக்காடுக்கான குற்றச்சாட்டுக்களை அடுக்கி உள்ளார்..!

நடிகர் விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு லண்டனில் வைத்தும், 1999 ஆம் ஆண்டு சென்னை எழும்பூரில் வைத்தும் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் , ஒருமகள் உள்ள நிலையில் கடந்த சில வருடங்களாக இருவரும் கருத்துவேறு பாடு காரணமாக வீட்டுகுள்ளேயே பிரிந்து வாழ்ந்துவருவதாக கூறப்பட்டது. இருதரப்பிலும் இந்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி, மனைவி சங்கீதாவின் சார்பில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரபல நடிகரும், தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியின் தலைவருமான விஜய் தான் தனது கணவர் என்றும் அவரிடம் இருந்து விவாகர்த்து மற்றும் ஜீவனாம்சம் கோடி இருந்தார். இந்த வழக்கு 24ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர அறிவுறுத்தியதோடு, வழக்கின் விசாரணை ஏப்ரல் மாதம் 20ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சங்கீதா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவின் முழு விவர போட்டோ காப்பி 27ந்தேதி மதியம் செய்தியாளர் வாட்ஸ் அப் குழுக்களில் பகிரப்பட்டது. அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் மட்டும் இல்லாமல் சங்கீதா , நடிகை ஒருவர் மீது தெரிவித்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் அம்பலமானது.

திருமணத்திற்கு பின்னர் விஜய், படவிழாக்கள் , பொது நிகழ்வுகள் மற்றும் வெளி நாடுகளுக்கு தன்னையும் , தனது குழந்தைகளையும் அழைத்துச் சென்றுவந்த நிலையில் தற்போது நடிகை ஒருவருடன் தான் வெளியே சென்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த நடிகையுடன், விஜய் தொடர்பில் இருப்பதை கண்டுபிடித்ததாக சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளார். அது குறித்து கேட்ட போது, தான் அதனை விட்டு விடுவதாக உறுதி அளித்த விஜய் , அதன் பின்னரும் தொடர்ந்து அந்த நடிகையுடன் கள்ள உறவை தொடர்ந்ததாக சங்கீதா குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஒரு கட்டத்தில் விஜய் தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னுடைய அடிப்படை உரிமைகளை மறுத்ததாகவும் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல மறுத்ததாகவும், வீட்டிலேயே அடைத்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளின் கல்வி நலன் கருதி அமைதி காத்து வந்த நிலையில் விஜய் அந்த நடிகையுடன் வெளி நாடுகளுக்கு ஒன்றாக சென்று சுற்றிவருவது. அதனை அந்த நடிகை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது. போன்றவை தனக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மன உளைச்சளையும் அவமானத்தையும் ஏற்படுத்தியதாக சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.

அந்த நடிகையின் இத்தகை செயலை விஜய் தடுக்கவோ, நிறுத்த சொல்லவோ இல்லை என்றும் பொது நிகழ்ச்சிகளுக்கும் அந்த நடிகையை அழைத்துச்செல்ல தொடங்கியதாகவும் இதனால் கடந்த 5 வருடங்களாக ஒரே வீட்டில் வசித்தாலும் தனி தனியாக வாழ்ந்துவருவதாக தெரிவித்துள்ளார். அனைத்து தரப்பினரின் நற்பெயரை காக்கும் வகையில் அந்த நடிகையின் பெயரை வெளியிடாமல் தவிர்ப்பதாக தெரிவித்துள்ள சங்கீதா , தேவைப்பட்டால் அந்த நடிகையுடன் தனது கணவர் ஒன்றாக இருக்கும் ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பேன் என்று குறிப்பிட்டு உள்ளார்.

முன்னதாக கடந்த நவம்பர் மாதம் வரை இந்த விவகாரத்தை முறைப்படி அமர்ந்து பேசி முடித்துக் கொள்ள தான் முயன்றதாகவும் அதனை விஜய் மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள சங்கீதா, விவகாரத்து பெறும் வரை தான் நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் வசிக்கவும், அவரது வருமானம் மற்றும் சமூக அந்தஸ்திற்கு ஏற்ப தனக்கு ஜீவானம்சம் தரவேண்டும் என்றும் நீதிமன்றத்தில் தக்கல் செய்துள்ள மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

அந்த மனுவில் சங்கீதா சொல்லி இருப்பது எந்த நடிகை..? யார் ? என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் சங்கீதாவின் சந்தோஷ லைப்பை, தக் லைப்பாக மாற்றிய சுகர் பேபி இவர் தான் என்று பலரும் முன்னனி நடிகை ஒருவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டிசம்பரில் விவாகரத்து மனு இப்ப அம்பலமானது எப்படி ?விஜய்யின் சுகர் பேபி ஷாக்..! சங்கீதா லைஃப்.. தக் லைஃப்பான சோகம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies