RECENT NEWS

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?

Feb 23, 2026

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்ட காங். - கனிமொழி சொன்ன பதில் என்ன?

Feb 23, 2026

BIG STORIES

டேப் சுற்றப்பட்டு பங்களாவில் சடலமாக நடிகையின் தந்தை.. கொடைக்கானலில் திகில்..! ஐவர் யார்? அதிர்ச்சி தகவல்கள்..!

Feb 23, 2026 02:11 PM

14

டேப் சுற்றப்பட்டு பங்களாவில் சடலமாக நடிகையின் தந்தை.. கொடைக்கானலில் திகில்..! ஐவர் யார்? அதிர்ச்சி தகவல்கள்..!

டேப் சுற்றப்பட்டு பங்களாவில் சடலமாக நடிகையின் தந்தை.. கொடைக்கானலில் திகில்..! ஐவர் யார்?

நடிகரும் இயக்குனருமான 'சிங்கம் புலி' இயக்கத்தில் சூர்யா,ஜோதிகா நடித்த திரைப்படம் 'மாயாவி'. இந்த திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து "கடவுள் தந்த அழகிய வாழ்வு" பாடல் மூலம் பலரையும் கவர்ந்தவர் நடிகை விஷ்ணு பிரியா.

விஷ்ணு பிரியா தற்போது ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். விஷ்ணு பிரியா தாயார் ஏற்கனவே காலமான நிலையில் தந்தை சூரிய நாராயணன் (73) கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே உள்ள சொந்த பங்களாவில் வசித்து வந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் சூரிய நாராயணனின்பங்களாவில் வேலை பார்த்து வந்த ஆறுமுகம் என்பவர், அருகில் உள்ள பங்களாவை நோக்கி "காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள்" என கத்தி கூச்சலிட்டதோடு, போலீசாருக்கு போன் செய்து இங்கு வர சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்து பதறிய பக்கத்து பங்களாவை சேர்ந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே கொடைக்கானல் காவல் நிலைய போலீசார், சூரிய நாராயணனுக்கு சொந்தமான பங்களாவிற்கு நுழைய முயன்றபோது, வெளிப்பகுதி பூட்டு போட்டு இருந்துள்ளது. பின்னர் போலீசார் அந்த பூட்டை உடைத்து பங்களாவின் உள்ளே சென்றனர்.

அப்போது பங்களாவில் வேலை பார்த்து வந்த ஆறுமுகம், மற்றும் முரளி ஆகியோர் ஒரு அறையில் இருந்துள்ளனர். மற்றொரு அறையில் பங்களாவின் உரிமையாளர் சூரிய நாராயணன் நாற்காலியில் அமரவைத்தபடி, உடல் முழுவதும் டேப் சுற்றப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். சடலத்தை கைப்பற்றிய போலீசார் உடற்கூறாய்விற்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேக பிரியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்றார். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மற்றொரு அறையில் இருந்த பங்களா ஊழியர்களான ஆறுமுகம், மற்றும் முரளி ஆகிய இருவரிடமும் விசாரணையை தொடங்கினர்.

சூரிய நாராயணனுக்கு சொந்தமான பங்களாவில் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு தங்கும் அறை வாடகைக்கு விடப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அந்த பங்களாவிற்கு வந்த ஐந்து பேர், அவர்களின் ஆவணங்கள் எதையும் கொடுக்காமல் அறை எடுத்ததாக கூறப்படுகிறது. அந்த ஐந்து பேரும் அறை எடுத்ததில் இருந்தே வெளியே எங்கும் செல்லாமல், அறையிலேயே இருந்து வந்தாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று மாலை அந்த 5 பேர் கொண்ட கும்பல், பங்களாவில் இருந்த ஆறுமுகம், முரளி ஆகிய இருவரையும் துணியால் கை, கால்களை கட்டி ஒரு அறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. அதற்கு அடுத்த அறையில் சூரிய நாராயணனை நாற்காலியில் அமரவைத்த அந்த கும்பல், அவரின் உடல் முழுவதும் கொஞ்சம் கூட இடம் இல்லாதவாறு டேப் கொண்டு சுற்றியுள்ளனர். அதில் சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறி சூரிய நாராயணன் இறந்துள்ளார்.

பின்னர் அந்த 5 பேர் கொண்ட கும்பல், பங்களாவில் உள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க்கினை திருடியதோடு, சூரிய நாரயணன், ஆறுமுகம், முரளி ஆகிய மூவர் அணிந்திருந்த தங்க செயின்,மோதிரங்களையும் அவர்கள் திருடி சென்றதாக சொல்லப்படுகிறது. பின்னர் அவர்கள் வாசலில் பூட்டு ஒன்றை பூட்டிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் ஆறுமுகம் நீண்ட நேரமாக போராடி, கையில் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து, கூச்சலிட்டதாக போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு நடிகை விஷ்ணு பிரியாவின் கணவருக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், அவர் கொடைக்கானலில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார். அப்போது விஷ்ணு பிரியாவிற்கு, கொடைக்கானலில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்த பிரபாகரன் என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த விஷ்ணு பிரியாவின் தந்தை சூரிய நாராயணன், டிரைவர் பிரபாகரனை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து சூரிய நாராயணன் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சூரிய நாராயணன் கொலை செய்யப்பட்டிருப்பதால் அந்த கொலைக்கு பழிவாங்க இவர் கொலை செய்யப்பட்டாரா? நகைகளை எடுத்து சென்றதால் அவர்கள் நகை திருட்டிற்காக இந்த கொலையை செய்தார்களா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அக்கம் பக்கத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

டேப் சுற்றப்பட்டு பங்களாவில் சடலமாக நடிகையின் தந்தை.. கொடைக்கானலில் திகில்..! ஐவர் யார்? அதிர்ச்சி தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies