RECENT NEWS

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

Feb 18, 2026

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

Feb 18, 2026

BIG STORIES

“சாமி கும்பிடும் பெண்களே உஷார்”.. 4 பவுன் தங்க சங்கிலியை அறுத்த திருட்டு சுந்தரி சிக்கினார்..!

Feb 18, 2026 01:49 AM

17

“சாமி கும்பிடும் பெண்களே உஷார்”.. 4 பவுன் தங்க சங்கிலியை அறுத்த திருட்டு சுந்தரி சிக்கினார்..!

திருட்டு சுந்தரி சிக்கினார்..!

திருத்தணி நந்தி ஆறு பகுதியில் உள்ள ஆறுமுகசாமி கோவிலில் நடந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலாவின் போது , பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க சங்கிலியை அறுத்து பறித்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்து தங்க சங்கிலியை அறுத்து கையும் களவுமாக சிக்கிய திருட்டு சுந்தரியை போலீசில் ஒப்படைத்த காட்சிகள் தான் இவை..!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் நந்தி ஆறு அருகில் ஆறுமுகசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலில் அங்காள பரமேஸ்வரி அம்மன் வீதி உலா நடந்தது. ஏராளமான பெண் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு அர்ச்சனைக்கு தேங்காய் பழத்தை கொடுத்து கொண்டிருந்தனர். அப்போது சாமியை பார்க்கும் ஆவலில் தேங்காய் பழத்துடன் நின்றிருந்த ஜோதி என்ற பெண்ணின் கழுத்தில் இருந்து 4 சவரன் தங்க சங்கிலியை அவருக்கு பின்னால் இருந்த பெண் ஒருவர் படக்கென அறுத்து இழுத்தார்.

தனது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை யாரோ பறிப்பதை உணர்ந்த ஜோதி, அந்த கையை எட்டிப்பிடித்து அவரது தங்க செயின் களவு போகாமல் தடுத்தார். அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்ற பெண்ணை அதிரடியாக மடக்கி பாதுக்காப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தார். கையும் களவுமாக சிக்கிய பெண் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போல நடித்தார்.

கூட்டத்தில் தங்க சங்கிலியை அறுக்க முயற்சிக்கிறார்கள், இந்த திருட்டு பெண்ணுடன் வந்த மற்றொரு பெண்ணும் இங்கே தான் கூட்டத்தில் நடமாடுகிறார் என்று ஜோதி எச்சரித்தார்.

இதனால் சுற்றி நின்ற பெண் பக்தர்கள் உஷாராயினர். கையில் சிக்கிய அந்த திருட்டு சுந்தரியிடம் பெண்கள் வாக்குவாதம் செய்ய தொடங்கினர்.

தங்க செயினை பறிகொடுப்பதில் இருந்து நூழிலையில் தப்பிய ஜோதி, அந்த பெண்ணை நோக்கி ஆவேசமாக எச்சரித்தார். நிலைமை விபரீதமாவதை உணர்ந்த போலீசார் அந்த பெண்ணை போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

அந்த பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட செல்லும் பெண்கள் தங்க நகைகளை அணிந்து செல்லும் போது கூடுமானவரை, மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும், அதிக அளவிலான நகைகளை அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சுட்டிக்காட்டும் போலீசார், தங்க சங்கிலிகளை பிடித்து இழுத்தால் எளிதில் அவர்கள் கைக்கு கிடைத்து விடாதபடி ஆடையுடன் சேர்த்து pin செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“சாமி கும்பிடும் பெண்களே உஷார்”.. 4 பவுன் தங்க சங்கிலியை அறுத்த திருட்டு சுந்தரி சிக்கினார்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies