BIG STORIES
"ஆம் வீட்டுக்குள்தான் இருக்கிறேன்.. தமிழ்நாடுதான் என் வீடு" விமர்சனங்களுக்கு விஜயின் பதிலடி
Feb 13, 2026 04:43 PM
12
தன்னை வீட்டை விட்டு வெளியே வா வெளியே வா என்பவர்களுக்கு தமிழ்நாடு தான் தனது வீடு என தவெக தலைவர் விஜய் பதில் அளித்துள்ளார். தவெக அனுபவம் இல்லாத கட்சி என்று கூறுகிறார்கள் என தெரிவித்த விஜய், அனுபவம் என்கிற பெயரில் 75 ஆண்டுகள் ஆன கட்சியும் 55 ஆண்டுகள் ஆன கட்சியும் மக்களை ஏமாற்றி கொள்ளை அடித்துக் கொண்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் வருகை தந்த விஜய்க்கு அங்கு வழிநெடுகிலும் திரண்டிருந்த தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பூக்களை தூவியும் வாகனத்தை மறித்தும் அவர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து சீலநாயக்கன்பட்டி செல்லும் வழியில் தந்தை பெரியார் பல்கலைக்கழகம் அருகே திரண்டிருந்தவர்கள் விஜய் பயணித்த காரை மறித்து வரவேற்பு கொடுத்தனர். இதனால் விஜயின் கார் தொடர்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது அந்த வழியில் நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் சிறிது நேரம் கூட்டத்தில் சிக்கிக் கொண்டது.
சீலநாயக்கன்பட்டியில் நிர்வாகிகள் சந்திப்பு நடைபெறம் இடத்திற்கு முன்பாகவும் ஏராளமானவர்கள் திரண்டு விஜயை வரவேற்றனர்.
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளின் கூட்டங்களுக்கும் அனுமதி கிடைப்பதாகவும் ஆனால் தவெக கூட்டத்திற்கு அனுமதி கிடைப்பதில்லை, மக்களை சந்திக்கும் தனக்கும் பாதுகாப்பு அளிப்பதில்லை, தன்னை சந்திக்க வரும் மக்களுக்கும் பாதுகாப்பு அளிப்பதில்லை என விஜய் தெரிவித்தார்.
மேலும் பணத்தை கொடுத்து வாக்கு கேட்பவர்களிடம் ஏமாந்துவிடக்கூடாது என கூறிய விஜய், விசில் சின்னத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தொண்டர்களுடன் உறுதிமொழியும் பெற்றக் கொண்டார்.
தமிழ்நாட்டில் என்னைப் போல் சுயமாகக் கட்சி தொடங்கி, ஒரு விழுக்காடு ஓட்டாவது வாங்கும் தைரியம் எந்தத் தலைவருக்காவது இருக்கிறதா என்றும் விஜய் கேள்வி எழுப்பினார்.
வெல்வோம் ஒன்றாக ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு வரும் சொத்துகளை மட்டும் அனுபவிப்போம் தனியாக என்கிற மனநிலையில் திமுக உள்ளதாகவும் விஜய் சாடினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu