RECENT NEWS

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

Feb 15, 2026

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல - டென்மார்க் பிரதமர் திட்டவட்டம்

Feb 15, 2026

BIG STORIES

தாய்மை வரம்.. களவு சாபம்.. வயிற்றில் துணியை கட்டி மாமியாரை ஏமாற்றிய மருமகள்..! குழந்தை திருடிய பின்னணி என்ன..?

Feb 15, 2026 12:34 PM

12

தாய்மை வரம்.. களவு சாபம்.. வயிற்றில் துணியை கட்டி மாமியாரை ஏமாற்றிய மருமகள்..! குழந்தை திருடிய பின்னணி என்ன..?

தாய்மை வரம்.. களவு சாபம்.. வயிற்றில் துணியை கட்டி மாமியாரை ஏமாற்றிய மருமகள்..!

திருச்சியில் குழந்தை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர் . 2 குழந்தைகள தாய் வீட்டில் இருக்க 4 வது திருமணம் செய்து வயிற்றில் துணியை சுற்றி, கர்ப்பிணி போல ஊராரை ஏமாற்றியவர் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..

திருச்சி மாவட்டம், துறையூரை சேர்ந்த விக்னேஷ் என்பவரது மனைவி சுகன்யா. கர்ப்பிணியான சுகன்யா கடந்த 11ம் தேதி பிரசவத்திற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

கடந்த நான்கு தினங்களாக சுகன்யா மருத்துவமனையில் இருந்து வந்த நிலையில் மருத்துவமனையில் பெண் ஒருவர் அறிமுகமாகி நட்புடன் பழகியுள்ளார். சனிக்கிழமை காலை 7 மணியளவில் குழந்தைக்கு தடுப்பூசி
செலுத்தி விட்டு வருவதாக கூறி அந்த பெண் குழந்தையை கடத்திச் சென்று விட்டார். இதுகுறித்து சுகன்யா கொடுத்த புகாரின் பேரில் GH காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிஅடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பெண் ஒருவர் குழந்தையை தூக்கிக் கொண்டு ஆட்டோவில் ஏறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அந்த பெண் வைத்திருந்த கைப்பையை மறந்த வாக்கில் மருத்துவமனையிலேயே விட்டுச் சென்றதும் தெரிய வந்தது.போலீசார் அந்த பையை சோதனையிட்ட போது அதில் அவரது ஆதார் அட்டை இருந்துள்ளது.

அதனை கைப்பற்றிய போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே
போலீசார் அந்த பெண்ணின் செல்போன் டவர் லொகேஷனை கண்டுபிடித்தனர். இதன் பின்னர் போலீசார்
அந்தப் பெண்ணை கண்டு பிடித்துடன் காணாமல் போன அந்த குழந்தை அங்கே இருந்ததை உறுதி செய்து கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில்தனது பெயர் மீனாட்சி எனவும் தனக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் கடந்தும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை நம்ப மறுத்த போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

38 வயதான மீனாட்சி கடந்த15 வருடங்களுக்கு முன்பு தஞ்சாவூரைச் சேர்ந்த
சரவணன் என்பவரை முதலாவதாக திருமணம் செய்தார் மீனாட்சி. அவருக்கு பெண், ஆண் என இரு
குழந்தைகள் பிறந்துள்ளது. தம்பதியினர் இடையே ஏற்பட்ட கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர்.
இதையடுத்து தனது இரு குழந்தைகளையும், திருச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு , திருச்சி
காட்டூரைச் சேர்ந்த விஜய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்தக் காதலும் நீண்ட நாள் நீடிக்கவில்லை. விஜயை கை கழுவி விட்டு, மூன்றாவதாக ராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனாட்சி . குறுகிய காலத்தில் ராம் இறந்து விடவே நான்காவதாக தற்போதைய கணவர்
சுரேஷை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். மாமியார் தன் மீது பாசமாக இருக்க வேண்டும் என்பதறக்காக தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி வயிற்றில் துணியை கட்டி குடும்பத்தினரை நம்ப வைத்தார். ஏழாம் மாதத்தில் வளைகாப்பும் வெகு விமரிசையாக நடத்தி உள்ளனர்.

அதன் பிறகு இரு மாதங்கள் கடந்த நிலையில் திருச்சி அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் நோயாளி போல நான்கு தினங்கள் வலம் வந்த மீனாட்சி இன்று அதிகாலை குழந்தையை கடத்திக்கொண்டு,திருச்சி BHEL பகுதியில் உள்ள தனது தாய் பெற்றோரிடம் ஆசி பெற்ற பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாமியாரை சந்திக்க தம்மம்பட்டி சென்றதாக மீனாட்சி போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதனைத் தொடர்ந்து மீனாட்சியின் கணவர் சுரேஷ் மாமனார் சேகர் மாமியார் சம்பூரணம் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சுகன்யாவிடம் குழந்தையை ஒப்படைத்த போலீசார் அவரை மீண்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மீனாட்சியை கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கடத்தல் சம்பவத்தில் அவர் மட்டும் ஈடுபட்டாரா அல்லது உறவினர்கள் யாருக்காவதுதொடர்பு உள்ளதா? என்று கோணத்திலும் விசாரணை நடந்து வருகின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"10 நிமிடங்கள் கொடுங்கள்".. உச்ச நீதிமன்றத்தில் தனி ஆளாக வாதாடி வென்ற +2 மாணவன்..! வியந்து பாராட்டிய நீதிபதி..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies