முகப்பு
பாரதத்தின் 5000 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Feb 15, 2026 01:36 AM
12
பாரதத்தின் 5000 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாரதத்தின் 5000 ஆண்டு கால வரலாற்றை சொல்லும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அமைச்சர்கள் அலுவலகமாக இருந்த நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்கள் கட்டி திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நார்த் மற்றும் சவுத் பிளாக் கட்டிடங்களை அருங்காட்சியமாக மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதன்படி 30 அரங்குகள் கொண்ட பிரமாண்டமான அருங்காட்சியம் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
யுகங்கள் தோறும் இந்தியா என்று பொருள் படும் யுகே யுகின் பாரத் என்ற சமஸ்கிருத பெயரில் அருங்காட்சியகம் அழைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிந்து சமவெளி நாகரீகம் முதல், நவீன காலம் வரை நாட்டின் வரலாற்றை விளக்கும் வகையில் அருங்காட்சியகம் அமையுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu