RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்

Feb 11, 2026 01:44 PM

120

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.!

ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் எனும் காங்கிரஸ் கட்சியின் விருப்பத்தை வெளிப்படையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துள்ளார். அதே சமயம் ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்பது திமுகவின் நிலைப்பாடு தான் என்றும் இது குறித்து காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் விருப்பத்தை தெரிவித்து திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறியிருந்தார். கிரிஷ் சோடங்கரை தொடர்ந்து காங்கிரஸ் மூத்த நிர்வாகி மாணிக்கம் தாகூர், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என வெளிப்படையாக பேசி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூட ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே தொலைக்காட்சியின் கலந்தாலோசனை நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆட்சியில் பங்கு எனும் காங்கிரசின் விருப்பம் குறித்து கேள்வி முன்வைக்கப்பட்டுது. இதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது ஒத்துவராது என்றார். ஆட்சி அதிகாரத்தில் பங்கு ஒத்துவராது என்பது திமுகவிற்கும் தெரியும், காங்கிரசுக்கும் தெரியும் என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரிக்க இடையில் உள்ளவர்கள் செய்யும் சதி என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் மூலம் கூட்டணி ஆட்சி எனும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படையாக நிராகரித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பு தொடர்பாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஆட்சியில் பங்கு இல்லை எனும் திமுகவின் நிலைப்பாட்டை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதே சமயம் திமுகவின் நிலைப்பாடு தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் தான் முடிவெடுக்க முடியும் என்றும் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது திமுக - காங்கிரஸ் கூட்டணியை பிரிப்பதற்கான சதி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது பற்றிய கேள்விக்கு, தங்கள் கட்சியில் யாரும் சதி செய்யவில்லை என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், கூட்டணி ஆட்சியா? ஒரு கட்சி ஆட்சியா? என மக்கள் முடிவெடுப்பார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளார். அத்தோடு 2006ம் ஆண்டு கூட்டணி ஆட்சி என மக்கள் கொடுத்த முடிவை செயல்படுத்த தவறியது காங்கிரசின் தவறு என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். அதாவது 2006ம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மைக்கு 117 இடங்கள் தேவை என்கிற நிலையில் 96 இடங்களில் மட்டுமே திமுக வென்றது. அப்போது 34 இடங்களில் வென்ற காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரித்த காரணத்தினால் திமுக 2006ல் தனித்து ஆட்சி அமைத்தது. இதனை குறிப்பிட்டே 2006ல் காங்கிரஸ் தவறு செய்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies