RECENT NEWS

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

ஈரான் போரை நிறுத்த ஜெர்மனி பிரதமர் மெர்ஸ் வலியுறுத்தல்

Mar 07, 2026

BIG STORIES

மண்ட பத்திரம்.. மண்ட பத்திரம்..! மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் ரெய்டு.. பிளஸ் 2 டாக்டர்கள் சிக்கினர்..! தலை தப்பியது எப்படி ?..!

Feb 11, 2026 09:04 AM

116

மண்ட பத்திரம்.. மண்ட பத்திரம்..! மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் ரெய்டு.. பிளஸ் 2 டாக்டர்கள் சிக்கினர்..! தலை தப்பியது எப்படி ?..!

மண்ட பத்திரம்.. மண்ட பத்திரம்..! மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் ரெய்டு.. பிளஸ் 2 டாக்டர்கள் சிக்கினர்..! தலை தப்பியது எப்படி ?..!

சென்னை அண்ணா நகரில் செயல்பட்டு வந்த மிஸ்டர் ஹேர் கிளினிக்கில் 12 ஆம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்களை வைத்து முடிமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக எழுந்த புகாரில் அந்த மருத்துவமனையை இழுத்துப்பூட்டிய போலீசார் 3 போலி மருத்துவர்களை கைது செய்தனர்.

சென்னை அண்ணாநகரில் மிஸ்டர் ஹேர் கிளினிக் என்ற முடிமாற்று அறுவை சிகிச்சையை மையம் செயல்பட்டு வந்தது. வழுக்கை தலையில் முடி நடுவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வந்தனர். உத்தரபிரதேசத்தில் போலியான முடி நடும் மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்ட சிலருக்கு உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து புகார்கள் அண்ணா நகர் முடி நடும் கிளினிக் மீதும் எழுந்தது.

இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்க இணை இயக்குனர் மற்றும் மருத்துவ குழுவினர் அடங்கிய குழு அங்கு ஆய்வு மேற்கொண்டது. அப்போது முடி நடும் சிகிச்சைக்காக தனது தலையை கொடுத்து அமர்ந்திருந்த சந்திரசேகர் (31) என்பவருக்கு உரிய மருத்துவர் இல்லாமல் அவருக்கு hair transplant செய்து கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.

அது மட்டுமின்றி hair transplant செய்ய வந்த ரோகித் என்பவரிடம் மருத்துவரே அல்லாத ஒருவர் ஆலோசனை வழங்கிக் கொண்டு இருந்தார். மேலாளர் பவுசியா என்பவரிடம் விசாரணை செய்த போது அந்த கிளினிக்கில் ஒருவர் கூட போதிய மருத்துவ படிப்பை மேற்கொள்ளாத நபர்களாக இருப்பது தெரியவந்தது. ஹோமியோபதி மருத்துவம் படித்த மருத்துவர் விஜயலட்சுமி hair transplant செய்ய வருபவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்குவதாகவும், ஜாபர் என்பவர் மயக்க மருந்து டெக்னீசியனாக பணிபுரிவதும் தெரியவந்தது. சிகிச்சை பெற வருபவர்களுக்கு மயக்க மருந்து அளிப்பதற்கு மருத்துவர் கல்வித் தகுதி இல்லாத ஒருவர், மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சிகிச்சையில் ஈடுபட்டது உறுதியானது.

மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்க இணை இயக்குனர் மீனாட்சி சுந்தரி அளித்த புகாரின் பேரில்
பஞ்சாப்பை சேர்ந்த ஜக்வீர் சிங், ஹர்திவப் சிங், வேலூரைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்யப்பட்டனர். பஞ்சாப் சேர்ந்த இருவரும் வெறும் பிளஸ் 2 மட்டுமே படித்திருப்பது தெரிய வந்தது மிஸ்டர் ஹேர் கிளிக் மருத்துவமனையை இழுத்து பூட்ட உத்தரவிட்டனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies