BIG STORIES
பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..! போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?
Feb 07, 2026 11:49 AM
30
பல்பில் ரகசிய கேமராக்கள் அந்தரங்க வீடியோக்களால் பெண் அரசு அதிகாரிக்கு மிரட்டல்..! போலி செய்தியாளர்கள் சிக்கியது எப்படி?
கர்நாடக மாநிலம் பெலகாவியில் கணவருடன் வசித்து வந்த அரசு பெண் அதிகாரி ஒருவர், தனது அந்தரங்க வீடியோக்களை மொபைலில் அனுப்பி, ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், மொபைல் எண்ணை வைத்து கோகாக் பகுதியை சேர்ந்த சமீர் நிசார் அகமது ஷேக், அப்துல் ரஷீத் மகந்தர் மற்றும் முகமது பலேகுந்த்ரி ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்தன.
அரசு பெண் அதிகாரி வீட்டில் பணிப் பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அரசு பெண் அதிகாரி அலுவலகம் செல்லும் போது வீட்டின் ஜன்னலில் சாவியை வைத்து விட்டு செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார். அந்த பணிப் பெண்ணிற்கு மட்டும் சாவி இருக்கும் இடம் தெரிந்ததால், அவர் வழக்கம் போல சாவி மூலம் கதவை திறந்து வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், கைதான மூவரும் அந்த பணிப் பெண்ணிடம் "நாங்கள் உனக்கு பணம் தருகிறோம், ஆனால் நாங்கள் அந்த வீட்டிற்குள் செல்ல உதவ வேண்டும்" என கூறியுள்ளனர். பணத்தாசையில் அந்த பெண்ணும், எஜமானி வெளியே சென்ற பின்னர், அந்த மூவருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
அப்போது வீட்டிற்குள் நுழைந்த அந்த மூவரும், படுக்கையறை, மற்றும் ஹால் பகுதிக்கு சென்று அங்கு பொருத்தப்பட்டிருந்த பல்பின் ஹோல்டர்களை கழற்றி விட்டு, தாங்கள் எடுத்து வந்த ரகசிய கேமராக்கள் உள்ள ஹோல்டர்களை பொருத்தி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதனை தொடந்து கணவன் மனைவி தாம்பத்திய உறவில் இருப்பதை எல்லாம் அந்த கேமராவில் அவர்கள் ரெக்கார்ட் செய்து அதனை சேகரித்து வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த கும்பல், பெண் அரசு அதிகாரின் மொபைல் வாட்ஸ் அப் எண்ணிற்கு அந்த வீடியோக்களை அனுப்பி வைத்தனர். இதனை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அப்போது, அந்த கும்பல் நாங்கள் பத்திரிக்கையாளர்கள் என்றும், இந்த வீடியோக்களை சமூக ஊடகங்கள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும் அந்த வீடியோக்களை எல்லாம், வெளியிடாமல் இருக்க வேண்டும் என்றால், எங்களுக்கு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த, அந்த பெண் அரசு அதிகாரி, போலீஸ் கமிஷ்னரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் பத்திரிகையாளர்கள் போல நடித்து மிரட்டிய அந்த மூன்று டுபாக்கூர் பத்திரிகையாளர்களையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து லேப்டாப் , மெமரி கார்டுகள், ரகசிய கேமராக்கள் பொருத்திய பல்பின் ஹோல்டர்கள், பென்ட்ரைவ், செல்போன்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைதானவர்களுக்கு உதவிய வீட்டின் பணிப்பெண் தலைமறைவான நிலையில், அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu