முகப்பு
உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
Feb 05, 2026 12:01 PM
42
குடியரசு தலைவர் உரை மீதான விவாதங்களுக்கு நன்றி தெரிவித்து மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் எழுப்பி அமளியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உரை
வளர்ச்சியடைந்து வரும் இந்தியாவில் அனைவருக்குமான வளர்ச்சியை உறுதி செய்து வருகிறோம் - பிரதமர்
குடியரசு தலைவர் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளிப்பதால் எதிர்க்கட்சிகள் அமைதி காக்குமாறு பிரதமர் கோரிக்கை
தன்னை எதிர்த்து முழக்கம் எழுப்பிய மல்லிகார்ஜூன கார்கேவிடம் இருக்கையில் அமர்ந்து முழக்கமிட கூறிய பிரதமர்
பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள் நலன்களுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது
பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில் முழக்கம் எழுப்பி இடைஞ்சல் செய்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு
21ஆம் நூற்றாண்டின் 2ஆவது கால்பகுதி, வளர்ந்த பாரதத்திற்கானதாக இருக்கும் - பிரதமர்
வளர்ந்த நாடுகளில் வயதானோர் எண்ணிக்கை அதிகரிப்பு; ஆனால், இந்தியாவில் இளையோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சர்வதேச சமூகத்திற்கு பிரச்சினை ஏற்படும்போது, அதனை தீர்க்கும் வலிமை மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது
மக்கள் நலனே பிரதானம் என்று பாஜக கருதுவதால் தான், 3ஆவது முறையாக ஆட்சி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறது
2014ல் உலக பொருளாதார நாடுகளின் பட்டியலில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 3ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது
உலகின் பல நாடுகள்; குறிப்பாக வளர்ந்த நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியபோது, இந்தியா தனித்துவமாக முன்னேறுகிறது
உலக நாடுகளுக்குள் பிரச்சினைகள் ஏற்படும்போது, அதற்கான நல்ல தீர்வுகளை இந்தியா வழங்கி வருகிறது
2047ல் வளர்ந்த பாரதம் இலக்கை அடைய முன்னோக்கி மட்டுமே செல்ல வேண்டும்; பின்னோக்கி பார்க்கத் தேவையில்லை
பாரதத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டே, வர்த்தக ஒப்பந்தங்கள் புரட்சி செய்து வருகிறோம்
உலகின் பல்வேறு நாடுகளுடன் 9 முக்கிய ஒப்பந்தங்களை இந்தியா எட்டியிருப்பதாக, பிரதமர் மோடி பெருமிதம்
எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டு சோர்வடைந்ததால், அவையில் இருந்து வெளிநடப்பு செய்துவிட்டனர் - பிரதமர்
இந்தியா உள்ளிட்ட தெற்குலக நாடுகள் என்ற சொல்லாடல், சர்வதேச சமூகத்தின் மத்தியில் பிரபலமடைந்து வருகிறது
எதிர்க்கட்சிகளுக்கு இந்தியாவின் வளர்ச்சியில் எந்தவித அக்கறையும் இல்லை; அதுகுறித்து முடிவெடுக்க திராணியும் இல்லை
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெறுமனே முழக்கமிட்டுவிட்டு ஓடி ஒளிய முடியாது; பதில் சொல்லியே ஆக வேண்டும் - பிரதமர்
எனது தலைமையிலான ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சியை அனைவரும் கண்கூடாக பார்த்து வருகிறோம் - பிரதமர்
சிறு, குறு தொழில்துறையில் புதிய சீர்திருத்தங்களை மேற்கொண்டு, மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, வளர்ச்சியின் பாதைக்கு வித்திட்டிருக்கிறோம்
இந்தியாவின் வளர்ச்சியை காணும் வளர்ந்த நாடுகள், பொருளாதார பலமிக்க நாடுகள், நம்முடன் ஒப்பந்தங்களை எட்ட பேரார்வம்
இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்துலக நாடுகளும் பாராட்டி வருகின்றனர் - பிரதமர்
சர்வதேச சமூகத்தோடு போட்டிப்போடுவதற்கு, அனைத்து நிலைகளிலும் இந்தியா தயாராக உள்ளது
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu