RECENT NEWS

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

அ.தி.மு.க பிரமுகரை வெ*டிச் சாய்த்தது கூலிப்படை.. ஏன்?.. தவறை தட்டிக்கேட்டது தப்பா?..

Feb 06, 2026

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..

Feb 06, 2026 04:17 PM

11

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..

போதை வஸ்து சப்ளை

சென்னையில் கஞ்சா மெத்த பெட்டமைன் உள்ளிட்ட போதை வஸ்துக்களை புழக்கத்தில் விட்ட புகாரில் நடிகை அஞ்சு உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நடிகை அஞ்சு மூலம் போதை பொருள் பயன் படுத்திய திரை பிரபலங்கள் கலக்கத்தில் உள்ளனர்.

சென்னையில் போதைப்பொருள் சப்ளை மற்றும் பயன்படுத்துவோரை கண்டறிந்து நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவு. சென்னை வடபழனி, சாலிகிராம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சினிமா பிரபலங்களுக்கு அதிகளவில் மெத்தம்பெட்டமைன் உள்ளிட்ட உயர் ரக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

முதலில் போதைப்பொருள் சப்ளையில் ஈடுபட்ட கோவூரைச் சேர்ந்த வெங்கடேஷ்குமார், கார்த்திக் ராஜா, காட்டுப்பாக்கத்தைச் யஷ்வந்த் ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து போதை பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 3 கிராம் மெத்தபெட்டமைன் 18 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் நடராஜன் , கோவிலம்பாக்கத்தில் வீட்டை வாடகைக்கு எடுத்து போதைப்பொருள் விற்றதாக கேரளா மாநிலம் பாலக்காடு விபின்ஷா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விபின்ஷாவின் செல்போன்னை ஆய்வு செய்த போது அதில் வடபழனி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சினிமா நடிகையான வின்சி நிவேதாவை போலீசார் கைது செய்தனர். அவரது படுக்கை அறையில் இருந்து மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.

வின்சி, தனது ஆண் நண்பரான விபின்ஷா மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் இணைந்து பெங்களூரு மற்றும்
கேரளாவுக்கு சென்று மெத்தம்பெட்டமைன், ஓஜி வகை கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து தனது கேரளா தோழியான அஞ்சு கிருஷ்ணா உதவியுடன் சினிமா பிரபலங்களுக்கு போதை பொருள் விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அஞ்சு கிருஷ்ணாவை போலீசார் கைது செய்தனர். இந்த சங்கிலி தொடர் நடவடிக்கையில் சினிமா நடிகைகள், அவரது தோழி, ஆண் நண்பர்கள் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சி, 2021ம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமா வாய்ப்பு தேடி அலைந்து துணை நடிகையானார். குறும்படத்தில் நடித்த போது வின்சிக்கு அதன் இயக்குநர் மூலம் போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வின்சி நிவேதாவுக்கு தற்போது பிரபல திரைப்படம் ஒன்றில் நடித்து வருவது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். துணை இயக்குனராகவும் வலம் வந்த வின்சிக்கு 2024 ஆம் ஆண்டுக்கு பிறகே திரைப்பட வாய்ப்புகள் வர தொடங்கினாலும் போதைப்பொருள் விற்பனையை மட்டும் அவர் நிறுத்தவில்லை.

நடிகை வின்சி செல்போனை போலீசார் சோதனை செய்த போது, அவரிடம் ரெகுலராக போதைப்பொருள் வாங்கிய சக சினிமா பிரபலங்கள், துணை நடிகைகள் சிலருக்கும், சினிமா டான்சர்கள் சிலருக்கும் சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. போதைப்பொருள் வாங்கி பயன்படுத்திய சினிமா பிரபலங்களின் பட்டியலை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நடிகை அஞ்சுவும், வின்சியும் உயிர் தோழிகளாக இருந்துள்ளனர். மலையாள நடிகையான அஞ்சு 2023 ஆம் ஆண்டு வெள்ளி மலை என்ற படத்தில் நடித்துள்ளார். அப்பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. வின்சி மற்றும் அவரது காதலன் தமீம் நிஷ்வான் உள்ளீட்ட நண்பர்களோடு தங்குவதும் அப்பொழுது போதைப்பொருளை பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது.

நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பதற்காக அஞ்சு கடந்த 5 நாட்களுக்கு முன் சென்னை வந்தது தெரியவந்தது. உயிர் தோழி வின்சியால் சிக்கிய அஞ்சு கிருஷ்ணா , போலீசாரிடம், தனது கேரியரே போய் விடும் என கதறி அழுதுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே இரு வருடங்களுக்கு முன்பு போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பதை போலீசார் நினைவூட்டி உள்ளனர். மேலும் உயிர்தோழி வின்சியுடன் எடுத்துக் கொண்ட செல்பி வீடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்டாவில் பதிவிட்டதால் அஞ்சுவின் நெருக்கம் அம்பலமானதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து கைதான நடிகைகள் வின்சி, அஞ்சு கிருஷ்ணா உள்ளிட்ட 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை வருகிற 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கிடையே அஞ்சுவுடன் தொடர்பில் இருந்த தமிழ் திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

போதை வஸ்து சப்ளை வின்சியால் சிக்கிய அஞ்சு.. பழகிய நடிகர்கள் கலக்கம்..! தியாகராஜன் படத்தில் நடிக்க வந்தவராம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies