முகப்பு
2026 -2027 : மத்திய பட்ஜெட் தாக்கல் LIVE UPDATES
Feb 01, 2026 05:51 AM
1024
2026 -2027 : மத்திய பட்ஜெட் தாக்கல் LIVE UPDATES
நாடாளுமன்றத்தில் 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல்
தொடர்ந்து 9ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை கொண்டிருக்கிறது - நிர்மலா சீதாராமன்
அரசின் பல்வேறு நிதி சார்ந்த நடவடிக்கைகளால் நாட்டு மக்கள் பலனடைகின்றனர் - நிர்மலா சீதாராமன்
சீர்திருத்த நடவடிக்கைகளால் நாட்டின் பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளது - நிர்மலா சீதாராமன்
தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளில் 2026-27 பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
12 வருட மோடி ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் மேம்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
வளர்ந்த பாரதம் என்ற நிலையை எட்ட மத்திய அரசு தொடர்ந்து பாடுபடுகிறது - நிர்மலா சீதாராமன்
இந்தியாவின் ஜி.டி.பி. 7 சதவீதம் எனும் உயர்ந்த நிலையில் உள்ளது - நிர்மலா சீதாராமன்
இந்த பட்ஜெட் 3 முக்கிய கடமைகளின் அடிப்படையில் தாக்கல் செய்யப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
''பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துவது, நாட்டு மக்களின் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டது பட்ஜெட்''
''நிலையான பொருளாதார வளர்ச்சி, மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வது,
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகிய 3 கடமைகளை கொண்டது பட்ஜெட்''
நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதே அரசின் பிரதான செயல்திட்டம் - நிர்மலா சீதாராமன்
ரூ.10,000 கோடியில் பயோ ஃபார்மா சக்தி திட்டம் கொண்டுவரப்படும் - நிர்மலா சீதாராமன்
உயிரி மருத்துவத்துறைக்காக மத்திய அரசு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
செமிகண்டக்டர் உற்பத்திக்கு 2.O திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
செமிகண்டக்டர் துறையில் ரூ.40,000 கோடி முதலீடு செய்யப்படும் - நிர்மலா சீதாராமன்
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசாவில் அரிய வகை தாதுக்களுக்கான வழித்தடம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
கன்டெய்னர்கள் உற்பத்திக்கு ரூ.10,000 கோடி முதலீடு செய்யப்படும் - நிர்மலா சீதாராமன்
விளையாட்டு உபகரண உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் - நிர்மலா சீதாராமன்
குறு, சிறு தொழிலை ஊக்குவிக்க மும்முனை திட்டம் - நிர்மலா சீதாராமன்
குறு, சிறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
நாட்டில் ஜவுளித்துறையை மேம்படுத்த சமர்த் 2.O திட்டம் - நிர்மலா சீதாராமன்
காதி உற்பத்தியை ஊக்கப்படுத்த ஜவுளிப்பூங்காக்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
குறு நிறுவனங்களை ஊக்குவிக்க ரூ.2000 கோடி சிறப்பு நிதி - நிர்மலா சீதாராமன்
2026- 2027ஆம் நிதியாண்டுக்கான மூலதனச்செலவு ரூ.12.20லட்சம் கோடியாக உயர்வு - நிர்மலா சீதாராமன்
2, 3ம் நிலை நகரங்களின் அடிப்படை கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
நீர்வழி முனையங்களை அமைப்பதற்கான புதிய திட்டம் அறிவிப்பு - நிர்மலா சீதாராமன்
பொதுப்போக்குவரத்திற்கு நாடு முழுவதும் 20 நீர்வழித்தடங்கள் - நிர்மலா சீதாராமன்