BIG STORIES
தப்பி ஓடிய பெண்ணை மடக்கிப் பிடித்த பப்ளிக்.. ஆவடியில் நடந்தது என்ன ? சொத்து பத்திரம் உஷார்..!
Feb 04, 2026 02:45 AM
16
தப்பி ஓடிய பெண்ணை மடக்கிப் பிடித்த பப்ளிக்.. ஆவடியில் நடந்தது என்ன ? சொத்து பத்திரம் உஷார்..!
சென்னையை அடுத்த ஆவடியில் சொத்து அசல் பத்திரங்களை பிணையாக பெற்றுக் கொண்டு அவசர கடன் வழங்கிய குட் வென்சர் குட் என்ற பைனான்ஸ் நிறுவனம் அந்த பத்திரங்களை வங்கியில் அடமானமாக வைத்து லட்சக்கணக்கில் பணம் பெற்று தலைமறைவான நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் மோசடி கும்பலை சேர்ந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
அடமானமாக பெற்ற அசல் பத்திரங்களை , வங்கியில் அடமானம் வைத்து பல லட்சம் கடன் பெற்று கம்பி நீட்டிய கும்பலை சேர்ந்தவர் என ஒரு பெண்ணை மடக்கிப்பிடித்த காட்சிகள் தான் இவை..!
சென்னையை அடுத்த ஆவடியில் good venture good என்ற பெயரில் குணசேகரன் என்பவர் குறுகிய கால கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஆவடி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் அவசர தேவைகளுக்கு குறுகிய கால கடன் வழங்குவதாக கூறி பலரது வீட்டு பத்திரங்களை பெற்று கொண்டு கடன் கொடுத்துள்ளனர்.
பலரும் தங்கள் அசல் பத்திரங்களை கொடுத்து கடன் பெற்றுள்ளனர். தங்கள் பெயரில் பவர் பெற்றுள்ளனர். கடனை செலுத்தியதும் பவர் ரத்து செய்ய வேண்டும் ஆனால், சொத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் வேறு ஒரு நபருக்கு sale deed வழங்கி, அதை வைத்து பல லட்சம் ரூபாய் வரை வங்கியில் கடன் பெற்ற குணசேகரன் தனது கும்பலுடன் தலைமறைவாகி விட்டதாக கூறினர்.
இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மோசடிக்கும்பல், ஆவடி கோவில்பதாகை அருகில் இருப்பதாக தகவல் அறிந்து பத்திரத்தை பறிகொடுத்தவர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்பொழுது அவர்களை கண்ட “குட் வென்சர் குட்” குணசேகரனின் கூட்டாளிகளான ஆனந்த் மற்றும் ஒரு பெண் ஆகியோர் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றுள்ளனர். இதனை கண்ட மக்கள் உடனடியாக சாலையில் அவர்களை துரத்தி சென்று பிடித்தனர்.
அப்பொழுது ஆனந்த் என்பவர் ஹெல்மெட்டல் தன்னை பிடித்தவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. எனினும் விடாத அவர்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டு சரமாரியாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடமிருந்து ஆனந்தை மட்டும் அழைத்து சென்றனர். இதனை பயன்படுத்தி தப்பி செல்ல முயன்ற பெண்ணை தப்பி செல்ல விடாமல் மடக்கிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி போலீசில் ஒப்படைத்தனர்.
இருவரையும் ஆவடி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடனுக்காக பத்திரங்களை அடமானம் வைக்கின்ற பொதுமக்கள் , அரசின் பொதுத்துறை வங்கிகள் தவிர்த்து மற்ற இடங்களில் பத்திரங்களை அடமானமாக வைத்து கடன் பெறுவது பாதுகாப்பற்ற நடைமுறை என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu