RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

BIG STORIES

அந்த ‘தம்பி’ நான் தான்.. மலையாள இயக்குனர் படவிழாவில் 'சீமான்'..! தமிழ் இயக்குனர்களால் முடியாதா?

Jan 31, 2026 02:28 PM

146

அந்த ‘தம்பி’ நான் தான்.. மலையாள இயக்குனர் படவிழாவில் 'சீமான்'..!
தமிழ் இயக்குனர்களால் முடியாதா?

அந்த ‘தம்பி’ நான் தான்.. மலையாள இயக்குனர் படவிழாவில் 'சீமான்'..! தமிழ் இயக்குனர்களால் முடியாதா?

'தலைவர் தம்பி தலைமையில்..' என்ற படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் ஜீவா, தமிழ் இயக்குனர்கள் கொடுக்காத வெற்றியை, தனக்கு இந்தப் படத்தின் மூலம் மலையாள இயக்குனர் கொடுத்துள்ளதாக பாராட்டினார். விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி , இது 90 சதவீத மலையாளிகள் பங்கேற்ற படம் என்பதால் சந்தோஷம் கொள்வதாக தெரிவித்தார்.


மலையாள இயக்குனர் நிதீஷ் சகாதேவ் இயக்கி , ஆர்.பி சவுத்ரியின் மகன் ஜீவா நடிப்பில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்..’ என்ற படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிவிழா சென்னை எம் ஆர் சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.

இதில் பங்கேற்று பேசிய படத்தின் நாயகன் ஜீவா, எனக்கு தமிழ் இயக்குனர்கள் கொடுக்காத பெரிய வெற்றியை இந்தப் படத்தின் இயக்குனர் கொடுத்து உள்ளார். என்றும் அதற்காக நன்றி கூற கடமை பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

பின்னர் மேடை ஏறிய ஜீவாவின் தந்தை ஆர்.பி சவுத்ரி, தனது மகன் தனக்கு கார் ஒன்றை பரிசளித்து இருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்ததோடு, ஜீவாவின் மகனையும் மேடையில் அனைவருக்கும் அறிமுகப்படுத்தினார்.

விழாவில் பங்கேற்று பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, பொதுவாக நான் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை தயாரிப்பாளர் கண்ணன் ரவிக்காக வந்தேன். இந்த படத்தில் பணியாற்றிய 90% பேர் மலையாளிகள் என்பதில் சின்ன சந்தோஷம் என்று கூறிய அவர் மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பால சுப்பிரமணியம் பாடிய இளைய நிலா பொழிகிறது என்ற பாடலை மேடையில் பாடினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும் போது , தான் இன்னும் ‘தலைவர் தம்பி தலைமையில்..’ படத்தை பார்க்கவில்லை என்றும் தன்னையும் பல பேர் தம்பி என தான் சொல்வார்கள் கூறினார்

இயக்குனர் ஆர்.கே செல்வமணி பேசும் போது, தமிழ் தெரிந்த தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது நல்லது என்றார், அதே நேரம் மற்ற மொழி பேசக்கூடிய தயாரிப்பாளர்கள் தமிழில் வரக்கூடாது என்று நான் சொல்லவில்லை என்றும் தெரிவித்தார்

ஜீவா சினிமா கேரியரில் ராம் படத்தை இயக்கிய அமீர், ஈ என்ற வெற்றி படத்தை கொடுத்த எஸ்.பி.ஜனநாதன். சிவா மனசுல சக்தி படத்தை கொடுத்த ராஜேஷ், கோ படம் கொடுத்த கே.வி ஆனந்த், நண்பன் படத்தை கொடுத்த ஷங்கர் என்று தமிழ் இயக்குனர்கள் பட்டியல் இருந்தாலும் , கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் 28 படங்கள் வெளியானாலும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றி இல்லாமல் தவித்த ஜீவாவுக்கு தலைவர் தம்பி தலைமையில் படம் மூலம் மலையாள இயக்குனர் நிதீஷ் சகாதேவ் கம் பேக் வெற்றியை கொடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies