RECENT NEWS

சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

Feb 01, 2026

சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

சொத்துவரி செலுத்தாதவர்கள் பட்டியலை வெளியிட்ட சென்னை மாநகராட்சி

Feb 01, 2026

BIG STORIES

மத்திய பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்கள்.? வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்.!

Feb 01, 2026 12:16 PM

30

மத்திய பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்கள்.? வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்.!

மத்திய பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்கள்.? வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்.!

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விகிதத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வருமான வரி சட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலக்கு வரும் என அறிவித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வருமானத்தை மறைப்பவர்களுக்கு 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என கூறியுள்ளார். .

நாடாளுமன்ற மக்களவையில் தொடர்ந்து 9வது முறையாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கரவொலி எழுப்பி அவரை வரவேற்றனர்.

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல், மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி எனும் 3 கடமைகளின் அடிப்படையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார். சிறிய தொழில் நிறுவன வளர்ச்சிக்கு என்று பிரத்யேகமாக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்பட்ட நோயாளிகள், வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் கேர் கிவ்வர்கள் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு மத்திய அரசு சார்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. தனியார் நிறுவனங்களுடன் இணைந்து மாநில அரசுகள் ஐந்து இடங்களில் மருத்துவ சுற்றுலா மையங்கள் அமைக்க மத்திய அரசு உதவிபுரிய உள்ளது.

3 இடங்களில் அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்களும், ஆயுஸ் மருந்தகங்களை மேம்படுத்தும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.15000 பள்ளிகள் 500 கல்லூரிகளில் கன்டென்ட் கிரியேசன் லேப்கள் அமைத்து மாணாக்கர்களின் கற்பனை திறன் மெருகேற்றப்படும்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு உலகத்தரத்தில் மத்திய அரசு சார்பில் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் விடுதிகள் அமைக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் 20 சுற்றுலா தளங்களை சேர்ந்த 10 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு உலகத்தரத்தில் பயிற்சி வழங்கப்படும். முதல் சர்வதேச புலிகள் உச்சி மாநாடு இந்தியாவில் நடத்தப்படும் என்றும் நிர்மலா அறிவித்துள்ளார்.

இந்தியாவை சேர்ந்த டேட்டா சென்டர்கள் மூலம் சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047ம் ஆண்டு வரை முழு வரி விலக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தேங்காய் உற்பத்தியை மேம்படுத்த தென்னை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கடலோர பகுதிகளில் 500 நீர்தேக்கங்கள் மேம்படுத்தப்பட்டு மீன் வளர்ப்பு தொழில் ஊக்குவிக்கப்படும். நாடு முழுவதும் வேளாண்துறை ஆய்வுகளை ஊக்குவிக்க ஏஐ சிஸ்டம் கொண்டுவரப்படும்.  

கனிம வளம் சார்ந்த பகுதிகள், தொழில் மையங்கள், துறைமுகங்களை இணைக்கும் வகையில் நாடு முழுவதும் புதிதாக 20 புதிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்பட உள்ளது. உலகத்தரத்திற்கு சுற்றுலா மையங்களை மேம்படுத்தும் மாநில அரசுகளின் திட்டங்களுக்கு மத்திய அரசு சார்பில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் ஈர்த்து கொடுக்கப்படும். மும்பை - புனே,புனே - ஐதராபாத், ஐதராபாத் - பெங்களூரு, ஐதராபாத் - சென்னை, சென்னை - பெங்களூரு, டெல்லி - வாரணாசி, வாரணாசி - சிலிகுரி என ஏழு அதிவேக ரயில் தடம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி குறைப்பு அல்லது நீக்கம் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா, வெளிநாட்டு கல்வி, புற்று நோய் மருந்துகள், காலணிகள், தோல் பொருட்கள், மைக்ரோ வேவ் ஓவன், கேமராக்கள், வீடியோ கேம் சாதனங்கள், காஃபி தயாரிக்கும் பொருட்களின் விலை குறையும்.

புதிய வருமான வரிச்சட்டம் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் வருமானத்தை மறைப்பவர்களுக்கு இனி 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதே சமயம் வருமான வரி தொடர்பான குற்றங்களுக்கு இனி கிரிமினல் நடவடிக்கை கிடையாது என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

மத்திய பட்ஜெட்டில் என்னென்ன மாற்றங்கள்.? வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம்.!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies