RECENT NEWS

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

Mar 17, 2026

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

ஈரானின் கடற்படை, விமானப்படை நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது - டிரம்ப்

Mar 17, 2026

BIG STORIES

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்து கஞ்சா பாய்ஸ் பயங்கரம்..! திகில் சம்பவத்தின் பின்னணி

Mar 17, 2026 02:22 AM

38

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்து கஞ்சா பாய்ஸ் பயங்கரம்..!  திகில் சம்பவத்தின் பின்னணி

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்து கஞ்சா பாய்ஸ் பயங்கரம்..! திகில் சம்பவத்தின் பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை பைக்கில் விரட்டிய கஞ்சா போதை இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வீரகநல்லூர் கிராமத்தை சேர்ந்த 10 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அருகில் உள்ள கேஜி கண்டிகை பள்ளியில் பொதுத் தேர்வு எழுதிவிட்டு, 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது அண்ணனுடன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது வீரகநல்லூர் பகுதியில் உள்ள அடர்ந்த சவுக்கு தோப்பில், வீசிஆர் கண்டிகையை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவ்வழியாக 10 வகுப்பு மாணவி, அண்ணனோடு பைக்கில் சென்றபோது, கஞ்சா போதையில் இருந்த 9 இளைஞர்கள் மூன்று பைக்கில், அந்த மாணவியை விரட்ட தொடங்கியுள்ளனர்.

இதனால் பயந்து போன மாணவியின் அண்ணன் பைக்கை வேகமாக இயக்கி தங்கையை பத்திரமாக வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால் அந்த இளைஞர்கள் வீடு வரை துரத்தி சென்றுள்ளனர். அப்போது அந்த மாணவி நடந்ததை, பெற்றோரிடமும், அப்பகுதியினருடமும் பதற்றத்தோடு தெரிவித்துள்ளார்.

அங்கிருந்த அப்பகுதியினர் அந்த போதை இளைஞர்களிடம் ஏன்அந்த பெண்ணை விரட்டினீர்கள்? என தட்டி கேட்க, ஆத்திரத்தில் அந்த இளைஞர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தாக்க முயன்றனர். இதனை சிலர் கையில் இருந்து தடுத்துள்ளனர்.

உடனே அந்த இளைஞர்கள் தங்களது கிராமத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு இன்னும் 10 இளைஞர்கள் வந்ததாக கூறப்படுகிறது. ஆத்திரம் தீராத இளைஞர்கள், ஒரு பெண்ணை கத்தியால் வெட்டியும், இருவரை அடித்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளை நோக்கி ஆயுதங்களோடு வெறி கொண்டு ஓடி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர், அங்கு நின்ற லோடு ஏற்றும் ஆட்டோவின் கண்ணாடிகளை உடைத்தும், சுமார் 7 வீடுகளின் கண்ணாடிகள், மின்விசிறி, ஜன்னல், கதவு என கண்ணில் படும் எல்லாத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனை பார்த்து, பயந்து போன கிராம மக்கள், உடனே அவசர உதவி எண் 100 ஐ தொடர்பு கொண்டபோதும், ஒத்துழைப்பு வழங்கவில்லை என்கின்றனர். பின்னர் அங்கிருந்த லோடு ஏற்றும் ஆட்டோவில் சிலர், 10 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, திருத்தணி காவல் நிலையத்தில் நடந்தது குறித்து தெரிவித்துள்ளனர்.

அப்போது, போலீசார் அலட்சியமாக கத்தியை எடுத்து வந்தார்கள் என்றால் நீங்கள் பதிலுக்கு தாக்கியிருக்கலாமே? என வினோதமாக கேள்வி எழுப்பியதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

பின்னர், போலீசார் அந்த கிராமத்திற்கு செல்வதற்குள் அந்த போதை இளைஞர்கள் தப்பித்து சென்றுள்ளனர். தாக்குதல் நடந்த இடத்தை போலீசார் நேரில் பார்வையிட்டனர்.
இந்த கொடூர செயலில் ஈடுபட்ட நபர்களை காவத்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும் என ஆத்திரமடைந்த கிராம மக்கள் திருத்தணி சோளிங்கர் நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

தொடர்ந்து இது போன்று சம்பவம் அரங்கேறி வருவதாகவும், தங்களால் வெளியே கூட செல்லமுடியவில்லை, தங்கள் கிராமத்தினருக்கு பாதுகாப்பு கிடையாது என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து, கஞ்சா போதை இளைஞர்களை தேடி வந்த நிலையில் வீசிஆர் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கிஷோர், அருண்குமார், விஜி மற்றும் 16 வயது இளைஞன் உட்பட நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாக்குதலில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பள்ளி மாணவியை விரட்டி ஊரையே நாசம் செய்து கஞ்சா பாய்ஸ் பயங்கரம்..!  திகில் சம்பவத்தின் பின்னணி
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies