RECENT NEWS

தட்டுப்பாடு என வதந்தி - பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்

தட்டுப்பாடு என வதந்தி - பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்

Mar 12, 2026

தட்டுப்பாடு என வதந்தி - பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்

தட்டுப்பாடு என வதந்தி - பெட்ரோல் நிலையத்தில் குவிந்த வாகன ஓட்டிகள்

Mar 12, 2026

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

Mar 12, 2026 04:34 AM

224

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அடுத்த குறுக்குச்சாலை அருகே 12 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து வீடு திரும்பிய மாணவி , இயற்கை உபாதை கழிக்க சென்ற போது கடத்தி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் குறுக்குச்சாலை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் செவ்வாய்கிழமை அரசு பொது தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய நிலையில், வீட்டில் கழிப்பறை வசதி இல்லாததால். இயற்கை உபாதையை கழிப்பதற்காக அருகில் உள்ள ஒதுக்குபுறமான சீமை கருவேல காட்டுக்குள் சென்றுள்ளார். நெடு நேரமாகியும் மாணவி வீட்டிற்கு திரும்பாததால் மாணவியின் உறவினர்கள் தேடி உள்ளனர்.`

இரவு 10 மணிவரை மாணவி கிடைக்கவில்லை, இதையடுத்து குளத்தூர் போலீசாரிடம் சென்று மாணவி மாயமான சம்பவம் குறித்து புகார் அளித்தனர். அந்த காவல் நிலையத்தில் இருந்த ஒரே ஒரு உதவி ஆய்வாளரும் காலையில் பார்க்கலாம் என்று கூறி அனுப்பி உள்ளார். விசாரிக்க எந்த ஒரு முன்னெடுப்பும் எடுக்க வில்லை என்று கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து காலையில் சென்று காவல் நிலையத்தில் 2 வது முறையாக புகார் அளித்துள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவி... தேர்வு எழுதி வந்துள்ளார்.. 17 வயது என்பதால், இதனை மகளிர் போலீசார் தான் விசாரிக்க வேண்டும் என்று உறவினர்களை விளாத்திக்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகின்றது.

அங்கு சென்ற பின்னர் புகாரை அடித்து அடித்து தங்கள் விருப்பத்துக்கு தகுந்தவாறு புகாரை எழுதி வாங்கி போலீசார் அலைக்கழித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்

இந்த நிலையில் மதியம் 1 மணி அளவில் அங்குள்ள கருவேலங்காட்டுக்குள் ஆடைகள் கிழிக்கப்பட்ட நிலையில் காயங்களுடன் அந்த மாணவி சடலமாக கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த குளத்தூர் போலீசார் விரைந்து சென்று முகம் வாய் உள்ளிட்ட பகுதிகளில் ரத்த காயங்களுடன் ஆடைகள் கலைந்து அலங்கோலமாக கிடந்த மாணவியின் சடலத்தை போலீஸ் படையின் துணையுடன் கைப்பற்றி பிணகூராய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது அங்கிருந்து அரைகிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று நின்றது அதன் அருகில் வட மாநில இளைஞர்கள் சிலர் தங்கி இருந்தனர். இதற்கிடையே மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராமத்துமக்கள் மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு குறுக்குசாலை கொளத்தூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மறியல் நீடித்து வரும் நிலையில் மாவட்ட எஸ்.பி மதன் உள்ளிட்டோர் சம்பவம் இடத்துக்கு வந்து பெரும் காவல்படையுடன் சென்று விசாரணையை தீவிரப்படுத்தினார். போலீசாரின் மெத்தனத்தால் மாணவியை மீட்க இயலாமல் போனதாக குற்றஞ்சாட்டிய மக்கள், சம்பந்தப்பட்ட கொடூரனை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். காலதாமதமாக சம்பவ இடத்துக்கு வந்த விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ மார்கண்டேயனை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், காலைக்குள் குற்றவாளியை பிடித்து விடுவோம் என்றும் எஸ்.பி தன்னிடம் கூறியதாக தெரிவித்த எம்.எல்.ஏ மார்கண்டேயன், கொலையாளியை பிடிக்கும்வரை தான் இங்கிருந்து செல்லமாட்டேன் என்று பெண்களை சமாதானப்படுத்தினார்

இருந்தாலும் பெண்கள் மாணவியை கொன்றவனை கைது செய்யும் வரை கலைந்து செல்ல மறுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே கோவில்பட்டி அதிமுக எம்.எல்.ஏ கடம்பூர் ராஜூ , மறியலில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்களை சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கொலையாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினார்

இதற்கிடையே சந்தேகத்தின் பேரில் வட மாநில இளைஞர் ஒருவரை பிடித்து விசாரித்து வரும் போலீசார் உள்ளூரில் மாயமான இளைஞர் ஒருவரையும் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

தேர்வு முடிந்து வீடு திரும்பிய 12 ஆம் வகுப்பு மாணவி கடத்தி பாலியல் வன்கொடுமை..! துப்பட்டாவால் கழுத்தை நெரித்த கொடூரம்..
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies