RECENT NEWS

தி.மு.க-காங் கூட்டணி உறுதியான பின் மேகதாது அணை திட்டம்.. முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி

தி.மு.க-காங் கூட்டணி உறுதியான பின் மேகதாது அணை திட்டம்.. முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி

Mar 08, 2026

தி.மு.க-காங் கூட்டணி உறுதியான பின் மேகதாது அணை திட்டம்.. முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி

தி.மு.க-காங் கூட்டணி உறுதியான பின் மேகதாது அணை திட்டம்.. முதல்வர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்?- அண்ணாமலை கேள்வி

Mar 08, 2026

முகப்பு

''வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்''.. சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. சங்கீதா பரபரப்புப் புகார்.!

Mar 08, 2026 02:06 AM

77

''வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்''.. சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. சங்கீதா பரபரப்புப் புகார்.!

சங்கீதா பரபரப்புப் புகார்.!

த.வெ.க. தலைவரும் தனது கணவருமான விஜய் தன்னை நீலாங்கரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுப்பதாக மனைவி சங்கீதா குற்றச்சாட்டியுள்ளார். விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில் சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் தவிப்பதாகவும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்...

சென்னை திருவான்மியூரில் அண்மையில் நடந்த திரைப்பட தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை திரிஷாவுடன் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார். ஒரே நிற பட்டு ஆடைகள் அணிந்து ஒரே காரில் சென்று இருவரும் கலந்துகொண்டது பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த திருமண நிகழ்ச்சி நடப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பே விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்தில் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு விவரங்கள் முதன்முறையாக வெளியே தெரியவந்தது. நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறி சங்கீதா விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள சூழலில் சென்னை நீலாங்கரை வீட்டிற்குள் தன்னை விஜய் அனுமதிக்க மறுப்பதாக சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருமணம் முடிந்து 26 வருடங்கள் குடும்பம் நடத்தி இரண்டு குழந்தைகள் பெற்று வளர்த்துள்ளதாகவும், திருமணத்திற்கு பிறகு பல வருடங்கள் விஜயை மிகவும் சிறப்பாக கவனித்துக் கொண்டதாகவும் மனுவில் சங்கீதா கூறியுள்ளார். தற்போது விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதால் சென்னையில் தற்போது வசிக்க இடம் இல்லாமல் இருப்பதாகவும் தெரிவித்துள்ள சங்கீதா, விவாகரத்து வழக்கு முடியும் வரை தன்னை விஜய் வசிக்கும் நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்க உத்தரவிடுமாறு அவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

ஏற்கனவே தாக்கல் செய்துள்ள விவாகரத்து வழக்கின் மூலம் விஜயிடம் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கீதா, திரைப்படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் தனக்கும், குழந்தைகளுக்கும் சேர வேண்டியதை நியாயமாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருவதால் சென்னையில் தனக்கு தனியாக வீடு இல்லை என தெரிவித்துள்ள சங்கீதா, விஜய் வசித்து வரும் நீலாங்கரை வீட்டில் தனக்கும் சரிபாதி உரிமை உள்ளதாக கூறியுள்ளார். மேலும், பலமுறை முயற்சி செய்தும் பரஸ்பரம் பிரிந்து செல்ல விஜய் ஒத்துக் கொள்ள மறுப்பதாகவும் மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''வீட்டிற்குள் அனுமதிக்க மறுக்கிறார் விஜய்''.. சென்னையில் வசிக்க வீடு இல்லாமல் தவிக்கிறேன்.. சங்கீதா பரபரப்புப் புகார்.!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies