RECENT NEWS

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு

Mar 07, 2026

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு

Mar 07, 2026 01:28 AM

21

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு

சென்னையில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்ற திமுக பிரமுகரின் கார் மோதி கர்ப்பிணி பெண் பரிதாபமாக பலியானார். தறிகெட்டு சென்று இரு உயிர்களை காவு வாங்கிய சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிவேகத்தில் சென்ற கார் மோதியதால் , கர்ப்பிணிப்பெண்ணும் அவர் பயணித்த மொபட்டும் தூக்கி வீசப்பட்ட காட்சிகள் தான் இவை..!

மதுராந்தகம் அடுத்த மோச்சேரி பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன்(25) இவரது மனைவி மோனிகா(21) நிறைமாத கர்ப்பிணியான மோனிகாவை, மருத்துவப் பரிசோதனைக்காக வாசுதேவன் தனது இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனை முடிந்து இருவரும் மீண்டும் இருசக்கர வாகனத்தில் மதுராந்தகம் நோக்கி சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையோரம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி அதிவேகமாக வந்த எக்ஸ் எல் சிக்ஸ் கார் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சற்றும் எதிர்பாராத நேரத்தில் வாசுதேவன் மோனிகா சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

இதில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த வாசுதேவன் மற்றும் மோனிகா ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். சாலையில் தூக்கி வீசப்பட்ட இருசக்கர வாகனம் முழுவதும் தீப்பற்றி எரிந்தது , மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மோனிகா பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை பின்னால் வந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மடக்கிப்பிடித்தார். திமுக கொடி கட்டப்பட்டிருந்த அந்த காரையும், தனது காரில் உள்ள டேஸ் கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளையும் மதுராந்தகம் காவல் ஆய்வாளர் வெங்கடேசனிடம் ஒப்படைத்தார்.

அதனடிப்படையில் விபத்தை ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்த போலீசார், அந்த காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த திமுக அபிமானி விக்னேஸ்வரனை பிடித்து விசாரித்தனர். அவரது மனைவி பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக உள்ளதாக என்று கூறப்படுகின்றது. திருமண நிகழ்வு ஒன்றில் பங்கேற்று விட்டு அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்ற போது இந்த கோர விபத்து நிகழ்ந்தது தெரியவந்தது. அரசியல் அழுத்தம் காரணமாக, கர்ப்பிணியின் மரணத்துக்கு காரணமான அதிவேக ஓட்டுனர் விக்னேஷ்வரனை கைது செய்யாமல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வீட்டுக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.

இது குறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்ட போது, பதற்றத்துடன் பேசத்தொடங்கிய அவர், காரை ஓட்டி வந்தவர் போதையில் இல்லை என்றும் ஹைவேசில் விபத்து நடப்பது இயல்பான ஒன்று என்றும் இதனை பெரிது படுத்த தேவையில்லை என்றார்

விபத்து ஏற்படுத்திய கார் மற்றும் அதனை இயக்கிய ஓட்டுனர் குறித்து எந்த ஒரு விவரத்தையும் தெரிவிக்காமல் மறைக்க முயன்ற காவல் ஆய்வாளர் வெங்கடேசன் முதலில் காரில் எந்த கொடியும் கட்டவில்லை என்றார், பின்னர் விசாரித்து விட்டுவருவதாக கூறி செனாவர், காரில் கட்சி கொடி கட்டி இருப்பதை ஒப்புக் கொண்டார்

சாலை விதியை மதித்து சரியான திசையில் சாலையோரம் சென்ற மொபட்டில் பயணித்த நிறைமாத கர்ப்பிணி மீது அதிவேகமாக காரை ஓட்டி வந்து மோதி , கர்ப்பிணியையும் ,வயிற்றில் இருந்த நிறைமாத சிசுவையும் கொன்ற ஓட்டுனர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே கோனிகா உறவினர்களின் கோரிக்கையாக உள்ளது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

திமுக கொடி கட்டிய தறிகெட்ட கார் மோதி கர்ப்பிணி பலியான சோகம்..! விபத்து ஏற்படுத்தியவர் விடுவிப்பு
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies