RECENT NEWS

நாங்குநேரியில் பயங்கரம் ! கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய போதை கும்பல்.. இருவர் தலை சிதைத்து கொலை

நாங்குநேரியில் பயங்கரம் ! கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய போதை கும்பல்.. இருவர் தலை சிதைத்து கொலை

Mar 03, 2026

BIG STORIES

நாங்குநேரியில் பயங்கரம் ! கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய போதை கும்பல்.. இருவர் தலை சிதைத்து கொலை

Mar 03, 2026 04:05 AM

57

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த பெரும்பத்து இந்திரா காலனி பகுதியில் உள்ள டீ கடை ஒன்றில் சிலர் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ஸ்கார்பியோ கார் மற்றும் பைக்குகளில் ஆயுதங்களுடன் , 9 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்தது. அந்த கும்பல் திடீரென அங்கு அமர்ந்திருந்தவர்கள் மீது பெட்ரோல்குண்டை வீசியது. சிதறி ஓடியவர்களை கண்மூடித்தனமாக தலையில் வெட்டியது.

இந்த கொடூர தாக்குதலில் சம்பவ இடத்திலேயே இருவர் பலியாகினர். அத்தோடு நிற்காமல் வண்டியில் ஏறிச்சென்ற அந்த போதைகும்பல் சாலையில் எதிரே வந்தவர்களை எல்லாம் கண்மூடித்தனமாக வெட்டியது. அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இந்த கோர தாக்குதலில் மொத்தம் எட்டு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது என கூறப்படுகிறது. இதில் ஜான் மற்றும் பெயர் தெரியாத வட மாநில செங்கல் சூளை தொழிலாளி ஆகிய இரண்டு பேர் தலை சிதைத்து கொலை செய்யப்பட்டனர்.

அப்படி இருந்தும் வெறி அடங்காத அந்த கும்பல் பெட்ரோல் குண்டுகளையும் வீசி பொதுமக்களை அலறி அடித்து ஓடச்செய்தது. அதே கும்பல் களக்காடு அருகே உள்ள கடம்போடு வாழ்வு கிராமத்திற்குள் புகுந்து பொதுமக்களை வெட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே போதை கும்பலின் இந்த அட்டூழியத்தை கண்டித்து பெரும்பத்து பகுதியில் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்தது சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த கொடூரர்களின் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 58 வயதான நெல்சன் மற்றும் 53 வயதான கணேசன் ஆகியோர் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்றவர்கள் நாங்குநேரி மற்றும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசம்பாவிதங்களை தடுக்க அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். தப்பி ஓடிய கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கொலை வெறி கும்பலின் தாக்குதலால் உயிரிழந்த ஜாண் மார்க்கின் மனைவி வாய் பேச இயலாத, கேட்கும் திறன் இல்லாத மாற்றுத்திறனாளி என்றும் அவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

நாங்குநேரியில் பயங்கரம் ! கண்ணில் பட்டவர்களை வெட்டி வீசிய போதை கும்பல்.. இருவர் தலை சிதைத்து கொலை
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies