குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
உலகம்
அலை, அலையாய் ஏவுகணைகள் வீச்சு.! தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்.!
Mar 01, 2026 02:14 AM
230
அலை, அலையாய் ஏவுகணைகள் வீச்சு.! தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்.!
அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடியாக கத்தார், குவைத், பக்ரைன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ மற்றும் கடற்படை தளங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியது. வளைகுடா நாடுகளில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டதால் விமானப் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தார், குவைத், ஜோர்டான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறி வைத்து ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தியது. பக்ரைன் மற்றும் சவுதி அரேபியாவில் உள்ள அமெரிக்க கடற்படை தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலும் ஈரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. ஈரானின் தாக்குதலால் தோஹா, துபாய் மற்றும் அபுதாபி நகரங்களில் குண்டுவெடிப்பு சப்தங்கள் எழுந்தன.
அமீரகத்தின் அபுதாபி நகரில் உள்ள விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. ஈரான் தாக்குதலை தொடர்ந்து அபுதாபி விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தாக்குதலை அடுத்து வளைகுடா நாடுகளின் வான்வெளி மூடப்பட்டது. துபாய் உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து விமானங்கள் இயக்கப்படுவது நிறுத்தப்பட்டன. கத்தார் ஏர்வேஸ் நிறுவனமும் விமானங்கள் இயக்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.
ஈரானின் தாக்குதலுக்கு கத்தார், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அனைத்து நாடுகளும் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று சவுதி அரசு வலியுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உதவும் எந்த நாடாக இருந்தாலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ள ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைக்கு பணிந்து சரண் அடையும் பேச்சுக்கே இடமில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, ஈரான் மீதான தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்யா, ஐநா பாதுகாப்பு கவுன்சிலை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.
இதனிடையே, ஈரான் தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவைகளை ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. இஸ்ரேல் மற்றும் ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தி இருக்கிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu