குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
முகப்பு
ஈரான் நாட்டின் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு
Mar 01, 2026 12:52 AM
162
ஈரான் நாட்டின் உயர் தலைவர் காமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு
ஈரான் மீதான தாக்குதலில் அந்நாட்டு உயர்மட்ட தலைவர் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும்,இஸ்ரேலும் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தமது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீதான துல்லிய தாக்குதலில் ஆயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு விட்டதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் மிக மோசமான மனிதர் உயிரிழந்து உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்திய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, ஈரான் உயர் மட்ட தலைவரான ஆயதுல்லா காமேனியின் வீடு இஸ்ரேல் தாக்குதலில் தரை மட்டமானது என்றும், காமேனியின் மருமகன், மருமகள், ராணுவத்தின் உயரதிகாரிகள், அணு ஆயுத திட்ட உயரதிகாரிகள் உயிரிழந்து விட்டதாக கூறினார்.
உயர்மட்ட தலைவரான காமேனி உயிருடன் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், காமேனி உயிரிழந்து விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால் இதனை ஈரான் அரசு தரப்பு மறுத்துள்ளது. அந்நாட்டு அரசு சார் செய்தி நிறுவனங்களான தஸ்னிம் மற்றும் மெஹர் இதனை மறுத்துள்ளன. காமேனி நல்ல உடல் நலத்துடன் உள்ளதாகவும், போரில் எதிரிகளுக்கு எதிரான நாட்டை வழிநடத்தி வருவதாகவும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu