உலகம்
நாய் நக்கியதற்கே இப்படியா? கை-கால்களை இழந்த பெண்.. 6 முறை இதயம் துடிப்பது நின்றது... செல்லப்பிராணிகளிடம் ஜாக்கிரதை!
Feb 25, 2026 07:02 AM
28
நாய் நக்கியதற்கே இப்படியா? கை-கால்களை இழந்த பெண்..
இந்திய வம்சாவளியை சேர்ந்த 52 வயதான மன்ஜீத் சங்கா இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டனில் தனது கணவருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் மன்ஜீத் சங்காவின் கையில் ஒரு சிறிய வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பொருட்படுத்தாத மன்ஜீத் தனது செல்ல நாயுடன் வழக்கம்போல் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்தபோது, நாயும் அவரது காயத்தை செல்லமாக நக்கால் வருடியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மன்ஜீத் சங்காவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதற்கு மறுநாளே அவர் சுயநினைவை இழந்து கோமா நிலைக்குச் சென்றார்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவருக்குக் கடுமையான 'Sepsis' தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
மன்ஜீத், சுமார் 32 வாரங்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடினார். கோமா நிலையில் இருந்தபோது, அவரது இதயம் 6 முறை துடிப்பதை நிறுத்தியதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது உயிரைக் காப்பாற்ற வேறு வழியின்றி, டாக்டர்கள் அவரது இரண்டு கைகளையும், முழங்கால்களுக்கு கீழே, இரண்டு கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி, மன்ஜீத் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தற்போது, அவர் செயற்கை கை- கால்கள் பொருத்துவதற்காக நிதி திரட்டி வருகிறார்.
செல்லப் பிராணிகளின் உமிழ்நீரில் இருக்கும் பாக்டீரியாக்கள், மனிதர்களின் உடம்பிலுள்ள காயங்கள் வழியாக உடலில் நுழையும்போது, இத்தகைய உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu