BIG STORIES
தெருவில் பைக் நிறுத்தியதால் காரை விட்டு ஏற்றிய கொடுமை.. தி.மு.க பிரமுகரின் மகன் அட்டுழியம்..! நசுங்கி பலியான அரசு அலுவலர்
Feb 24, 2026 01:58 AM
78
ஓசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளரை கார் ஏற்றி கொலை செய்ததாக 3 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். தெருவில் நிறுத்தப்பட்ட பைக்குகளால் உண்டான மோதலில், காரை விட்டு மோதிய பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு...
ஓசூர் இராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள அன்னை அரவிந்தர் நகரை சேர்ந்தவர் சிவமூர்த்தி (54) இவர் ஓசூரில் உதவி தொழிலாளர் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு கிருபாகரன் (35) பாஸ்கர் (33) என இரண்டு மகன்கள் உள்ளனர்.
சம்பவத்தன்று சிவமூர்த்தி வசிக்கும் அன்னை அரவிந்தர் நகர் தெருவில் காரில் சென்ற இளைஞர் ஒருவர் சிவமூர்த்தியின் வீட்டின் முன்பு இருசக்கர வாகனங்கள் சாலையில் நிறுத்தப்பட்டதை பார்த்து தொடர்ச்சியாக ஹார்ன் அடித்துள்ளார். அப்போது வீட்டிற்க்குள்இருந்து சிவமூர்த்தி, அவரது மகன் கிருபாகரன் ஆகியோர் வெளியே சென்று இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றபோது காரை ஓட்டி வந்த இளைஞருக்கும் சிவமூர்த்தி குடும்பத்தாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு கிருபாகரனின் மனைவி அம்சவேணி, தனது 6 வயது சிறுமியுடன் வெளியே வந்தார்.
இரு தரப்பிலும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், காரை ஓட்டிவந்த இளைஞர் , மற்றும் காரில் வந்த இரு இளைஞர்கள் சேர்ந்து, கீழே கிடந்த கட்டையை எடுத்து சிவமூர்த்தி மற்றும் அவரது குடும்பத்தாரை தாக்க முயன்றதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது காரில் ஏறி அமர்ந்து , காரை அதிவேகமாக இயக்கிச்சென்று சிவமூர்த்தி குடும்பத்தினர் மீது அதிவேகமாக மோதியதாக கூறப்படுகின்றது. இதில் சிவமூர்த்தி, கிருபாகரன், அம்சவேணி மற்றும் 6 வயது சிறுமி உள்ளிட்டோர் பலத்த காயம் அடைந்தனர். குழந்தைக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த மூன்று பேரையும் மீட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலத்த காயம் அடைந்த சிவமூர்த்தி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த ஓசூர் நகர போலீசார் விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிவமூர்த்தி குடும்பத்தினர் மீது காரை விட்டு ஏற்றி கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றியவர் கும்பாரப்பேட்டை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் சீனிவாசனின் மகன் வாலிபர் ஆதித்யா (24) என்பது தெரியவந்தது.
ஆதித்யாவும், அவருடன் காரில் வந்த ஹரிஷ் , ரிதிக்குமார் ஆகிய 3 பேரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். தெருவுக்குள் வேகமாக செல்ல பைக்குகள் தடையாக இருந்ததால் உண்டான வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி , கொலையில் முடிந்துள்ளதாக தெரிவித்த போலீசார் , கொலை சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவர்கள் ஆதித்யா உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஆதித்யாவின் தந்தை சீனிவாசன் திமுகவில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார். இந்த சம்பவம் ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu