குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
BIG STORIES
ஏம் பாட்டுக்கு.. சிவனேனு இருந்தேன்.. என் மார்க்கெட்ட சோலியமுடிச்சிட்டு...இப்ப.. தேமுதிகவோடு கூட்டணியா ? வடிவேலு மைண்ட் வாய்ஸ் பரிதாபம்
Feb 20, 2026 12:45 PM
405
ஏம் பாட்டுக்கு.. சிவனேனு இருந்தேன்.. என் மார்க்கெட்ட சோலியமுடிச்சிட்டு...இப்ப.. தேமுதிகவோடு கூட்டணியா ? வடிவேலு மைண்ட் வாய்ஸ் பரிதாபம்
2011 ஆம் ஆண்டு வடிவேலுவின் தேர்தல் பிரச்சார பேச்சை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.. குறிப்பாக விஜயகாந்தின் உண்மை விசுவாசிகள் கண்ணை மூடினால் கனவில் கூட வடிவேலு திட்டிச்செல்வது தான் நினைவிற்கு வரும்..!
செல்லுமிடமெல்லாம் திரண்ட மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் , தன்னை திரையுலகில் கைதூக்கி விட்ட நன்றி கடன் மறந்து, விஜயகாந்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் வசைபாடினார் வடிவேலு
ஆனால் ஒரு இடத்தில் கூட தன்னை விமர்சித்த வடிவேலு குறித்து விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசவில்லை. 2011 தேர்தல் முடிவு வெளியாகி விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக சட்டமன்றத்துக்கு சென்றார்.
அப்போது நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு முன்னணி காமெடி நடிகராக வலம் வந்த வடிவேலுவோ, படப்பிடிப்புக்கே செல்ல இயலாமல் வீட்டுக்குள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
ஆண்டுக்கு 11 படங்களில் நடித்து வந்த வடிவேலு அடுத்த 16 வருடங்களில் நடித்த மொத்த படங்களே 11 தான் என்றால் அவரது மார்க்கெட் வீழ்ச்சிக்கும், வருமான இழப்பிற்கும், விஜயகாந்துக்கு எதிரான பிரச்சாரம் மூல காரணமாக அமைந்ததாக கூறப்பட்டது.
அதன் பின்னர் விஜயகாந்த் மரணத்துக்கு அஞ்சலி செலுத்த கூட செல்லவில்லை என்று வடிவேலுவை கருத்துக்களால் வெளுத்த நெட்டிசன்கள், தற்போது திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கும் நிலையில் வடிவேலுவின் மைண்ட் வாய்ஸ் என்று அவர் நடித்த காமெடி காட்சிகளை பதிவிட்டு வருகின்றனர
ஏற்கனவே தேமுதிகவோடு வடிவேலுக்கு வாய்க்கால் தகராறு இருக்கும் நிலையில் வடிவேலு எப்படி ஆதரித்து பிரச்சாரம் செய்வார் ? என்றும் ஒரு வேலை ரொம்ப நல்லவன்னு... சொன்னால் வடிவேலு கூச்சப்படாமல் பிரச்சாரத்துக்கு சென்று விடுவார் என்றும் கலாய்த்து வருகின்றனர்..!
நடிகர்களில் யாருக்கு, படத்தில் தாங்கள் நடித்த காட்சிகள் பொறுந்துகிறதோ , இல்லையோ, வடிவேலுவின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் , படத்தில் நடித்த காட்சிகளும் பக்காவாக பொருந்தி போகின்றது என்கின்றனர் திரை உலகினர்
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu