RECENT NEWS

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!

Feb 21, 2026

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!

Feb 21, 2026

BIG STORIES

இந்தியாவை தலைகுனிய வைக்க காங்கிரசார் அரை நிர்வாண கோஷம்... அடித்து விரட்டிய பார்வையாளர்கள்..! நாட்டுக்கு ஒன்னுன்னா NO காம்பரமைஸ்

Feb 21, 2026 01:21 AM

6

இந்தியாவை தலைகுனிய வைக்க காங்கிரசார் அரை நிர்வாண கோஷம்...
அடித்து விரட்டிய பார்வையாளர்கள்..! நாட்டுக்கு ஒன்னுன்னா NO காம்பரமைஸ்

இந்தியாவை தலைகுனிய வைக்க காங்கிரசார் அரை நிர்வாண கோஷம்... அடித்து விரட்டிய பார்வையாளர்கள்..! நாட்டுக்கு ஒன்னுன்னா NO காம்பரமைஸ்

டெல்லியில் நடந்து வரும் AI மாநாட்டில் , சர்வதேச நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், இளைஞர் காங்கிரசார் நடத்திய அரை நிர்வாண போரட்டம் கடும் விமர்சனத்துள்ளான நிலையில் , போராட்டக்காரர்களை பார்வையாளர்கள் அடித்து விரட்டிய வீடியோ வெளியாகி உள்ளது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் இந்தியாவின் பெருமைக்கு மகுடம் சேர்க்கும் வகையில் டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த AI உச்சி மாநாடு நடந்து வருகின்றது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வருகை தந்து இந்தியாவின் செயல்பாடுகளை பாராட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் பார்வையாளர்கள் போல மாநாடு நடந்த பாரத மண்டபத்திற்குள் நுழைந்த இளைஞர் காங்கிரசார் 11 பேர், தங்கள் மேல்சட்டையை கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு, மறைத்து கொண்டு வந்திருந்த டி சர்ட் ஒன்றை கையில் பிடித்து, பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டபடி மையப்பகுதிக்குள் நுழைந்தனர்.

இதனை கண்ட பார்வையாளர்களும் மாநாடு ஏற்பாட்டாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

சில நிமிடங்களே நீடித்த இளைஞர் காங்கிரசாரின் , இந்த அநாகரீக போராட்டத்துக்கு அங்குள்ள இளம் பார்வையாளர்கள் முடிவு கட்டினர்.

போராட்டங்காரர்கள் கையில் பிடித்திருந்த , பிரதமர் மோடியின் கேலி சித்திரம் வரையப்பட்ட பனியனை பறித்ததோடு , அவர்களை தாக்கி விரட்டினர். அடி விழத்தொடங்கியதும் இளைஞர் காங்கிரசார் ஒவ்வொருவராக ஓடத்தொடங்கினர்

ஒரு கட்டத்தில் , பாதுகாப்பு படை போலீசார் வந்து அவர்களை அப்புறப்படுத்தி வெளியே அழைத்துச்சென்ற போது , இளைஞர் காங்கிரசாரை விரட்டி விரட்டி இளைஞர்கள் அடித்து உதைத்தனர்

இதனால் போரட்டம் நடத்திய இளைஞர் காங்கிரசார் விட்டால் போதும் என்று பின்னங்கால் பிடரியில் அடிக்க தப்பி ஓடினர்.

இருந்தாலும் போரட்டத்தில் ஈடுபட்டதோடு, மாநாட்டிற்குள் நுழைந்து சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட வழக்கில் அவர்களை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.

இளைஞர் காங்கிரசாரின் இத்தகைய செயல் , தேசத்துக்கு பெருத்த அவமானத்தை தேடித் தந்துள்ளதாக பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் வழுக்க தொடங்கி இருக்கின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

பேக்கரிக்குள் பெண்ணிடம் சாதி கேட்டு வாய் சண்டை போட்ட வி.சி.க பிரமுகர்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies