BIG STORIES
குடிநீரில் தூக்க மாத்திரை கலந்து தங்க நகை பறிப்பு..! இது புதுசா இருக்கு கிழவி..! உதவி செய்தாலும் உபத்திராம் தானா ?
Feb 18, 2026 04:32 PM
10
தஞ்சாவூர் அருகே ஆதரவில்லாமல் தவிப்பதாக கூறி பெண்ணின் வீட்டில் வேலைக்கு சேர்ந்த மூதாட்டி ஒருவர், குடிநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து ஆதரவளித்த பெண்ணை மயக்கமுற செய்து, நகைகளை பறித்துக் கொண்டு தப்பிய சம்பவம் நிகழ்துள்ளது
ஆதரவளித்த பாவத்துக்கு அடைக்கலம் கொடுத்த பெண்ணிடமே நகை பறித்ததாக கைது செய்யப்பட்ட தாய்க்கிழவி சுபலட்சுமி இவர் தான்..!
தஞ்சை ரெட்டிபாளையம் சாலை ஆனந்தம் நகரை சேர்ந்த ராஜேந்திரன் - ரஞ்சிதம் தம்பதியினர் தஞ்சை இராஜா மிராசுதார் மருத்துவமனை அருகில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் இவர்களது கடைக்கு வந்து தனக்கு யாரும் இல்லை என உதவி கோரினார். இரக்கப்பட்ட ரஞ்சிதம் மூதாட்டியை தனது வீடு மற்றும் கடையில் வேலைக்கு வைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது.
சம்பவத்தன்று மதியம் மூதாட்டியை அழைத்து கொண்டு ரஞ்சிதம் வீட்டிற்கு சென்று உள்ளார். வீட்டிற்கு சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வராததால், சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டிற்குள் ரஞ்சிதம் மயங்கிய நிலையில் இருந்ததுள்ளார்.
அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும் , உடன் சென்ற மூதாட்டியையும் காணவில்லை. மனைவி ரஞ்சிதத்தின் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பினர். என்ன நடந்தது என்று விசாரித்த போது. வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மூதாட்டி குடிப்பதற்கு கொடுத்த தண்ணீரை குடித்ததும் தான் மயங்கியதாக கூறினார். அதன் பின்னர் மூதாட்டி நகைகளை கழற்றி எடுத்துக் கொண்டு மாயமானது தெரியவந்தது.
இது குறித்தான புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து நகைகளுடன் மாயமான மூதாட்டியை தேடி வந்தனர்.
தஞ்சை ரயில் நிலையம் அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றிருந்த ஒரு மூதாட்டியை பிடித்து விசாரித்த போது, அவர் தான் நகைகளை அபேஸ் செய்தவர் என்பதும் அவர், திருச்சி மாவட்டம் காந்தி மணப்பெண் உப்பு பாளையத்தை சேர்ந்த செபஸ்டியான் என்பவரது மனைவி சுபலட்சுமி என்பதும் தெரிய வந்தது
தொடர்ந்து சுபலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், ரஞ்சிதத்திற்கு தண்ணீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து அவர் அணிந்திருந்த நகைகளை திருடி சென்றதை ஒப்புக் கொண்டார்.
தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் பெண்களிடம் அனுதாபம் ஏற்படுவது போல பழகி இது போல குடி நீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து நகைகளை திருடியது தெரிய வந்ததால் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu