RECENT NEWS

பணியில் இருந்த உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்.!

பணியில் இருந்த உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்.!

Feb 17, 2026

பணியில் இருந்த உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்.!

பணியில் இருந்த உதவி ஆய்வாளரை சரமாரியாக தாக்கிய போதை இளைஞர்.!

Feb 17, 2026

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?

Feb 17, 2026 01:25 AM

45

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?

அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு

சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தன் மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கு தொடர்பாக டி.ஆர்.பாலுவை குறுக்கு விசாரணை செய்த பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள் எழுப்பிய நிலையில் டி.ஆர். பாலு தரப்பு வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுசென்றார்.

DMK பைல்ஸ் என்ற பெயரில் ,பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட , திமுகவினரின் சொத்து பட்டியலுக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. கடந்த முறை அண்ணாமலையை , டி.ஆர் பாலுவின் வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்த நிலையில், திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜரான டி.ஆர் பாலுவை குறுக்கு விசாரணை செய்ய அண்ணாமலையே நேரடியாக கேள்விகளை எழுப்பினார்.

நீதிபதிக்கு முன் எதிர் எதிரே அண்ணாமலையும், டி.ஆர்.பாலு நின்ற நிலையில் அண்ணாமலை தன்னுடைய கேள்விகளை தொடங்கினார்.

2014 ம் ஆண்டு கப்பல் போக்குவரத்து துறையின் அமைச்சராக இருந்த போது டி.ஆர் பாலு 10 கப்பல்களை சொந்தமாக வாங்கினார் என முன்னாள் திமுக மத்திய அமைச்சர் மு.க அழகிரி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அது நியாபகம் இருக்கிறதா ? என்று அண்ணாமலை கேட்டார்.

டி.ஆர் பாலு தனக்கு தெரியாது என்றதும், 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதி Pioneer news paper ல் இந்த செய்தி வந்துள்ளதாக கூறி அண்ணாமலை ஆதாரம் தாக்கல் செய்தார். இதற்கு , செய்தி வேறு விதமாக உள்ளது அதை உள் நோக்கத்துடன் வேறு விதமாக அண்ணாமலை பேட்டியளித்துள்ளார். அது அவதூறு தான் என்று டி.ஆர் பாலு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்துவதற்காகவும், சுய லாபம் அடைவதற்காகவும் டி.ஆர் பாலு அமைச்சராக இருந்த போது 10 மீன் பிடி கப்பல்களை அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வாங்கியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க அழகிரி அந்த பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.

மு.க அழகிரிக்கோ, அண்ணாமலைக்கோ சேதுசமுத்திர திட்டம் என்றால் என்ன ? என்பதே தெரியவில்லை என்றார் டி.ஆர்.பாலு, உடனடியாக குறிக்கிட்ட அண்ணாமலை அப்படியென்றால் அழகிரி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தீர்களா? என்று கேள்வி எழுப்பினார் . இதற்கு நான் மட்டுமே கப்பல் வாங்கியதாக சொல்வதில் உண்மையில்லை என்ற டி.ஆர் பாலு, உள் நோக்கத்துடன் அழகிரி பேட்டி கொடுத்ததாக கருதவில்லை என்றார் . மேலும் 10 கப்பலில் 2 கப்பல்கள் மட்டுமே வாங்கப்பட்டது என்ற டி.ஆர்.பாலு அழகிரி விஷயம் தெரியாமல் அறைவேக்காட்டு தனமாக செய்தி தாளுக்கு பேட்டியளித்திருப்பதாகவும், அதற்காக அவதூறு வழக்கு தொடர தேவையில்லை அண்ணாமலையும் அறைவேக்காட்டு தனமாக அதை ஆதாரமாக கொடுக்கிறார் என்றார்.

“சேது சமுத்திர திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்தால் அதில் கப்பல்கள் செல்ல 18 மீட்டர் ஆழம் தோண்டப்படும் , ஆனால் நீங்கள் சொல்லும் மீன்பிடி கப்பல்கள் செல்ல 6 மீட்டர் ஆழம் தோண்டினால் போதும் மொத்தத்தில் அழகிரி சொன்ன செய்தியில் தப்பு உள்ளது” என்ற டி.ஆர். பாலு இந்த உண்மை தெரியாமல் அறைவேக்காட்டு தனமாக பேசியதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது என்றார்.

2004 முதல் 2009 வரை டி.ஆர் பாலு மத்திய அமைச்சரவையில் இருந்த போது செய்த தவறுகள் காரணமாக 2009 ம் ஆண்டு அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கவில்லை என அழகிரி பேட்டியளித்திருந்தார் அது தெரியுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்

அதற்கு மு.க அழகிரி அவ்வாறு சொல்லவில்லை, அவ்வாறு சொல்வதற்கு அவருக்கு எந்த தகுதியும் இல்லை, அவ்வாறு சொல்ல பிரதமருக்கு மட்டும் தான் தகுதி உள்ளது என்று டி.ஆர் பாலு தெரிவித்தார்.

டி.ஆர் பாலு சேது சமுத்திரம் கால்வாய் திட்டத்தை கொண்டு வந்ததே தூர்வாருவது மூலம் பணம் சம்பாதிக்க தான் வல்லுனர்கள் அவருக்கு இந்த திட்டம் என்பது நடைமுறையில் பொருளாதார அடிப்படையிலும், சுற்றுச்சூழல் அடிப்படையிலும் சாத்தியம் அற்றது என கூறிய போது அதனை டி.ஆர் பாலு ஏற்கவில்லை, அதனால் உச்ச நீதிமன்றம் இத்திட்டத்தை கிடப்பில் போட்டது என சுப்பிரமணியசாமி ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி அளித்தது தெரியுமா? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.

இது சரியல்ல, தவறானது, உள் நோக்கம் கொண்டது, சேது கால்வாய் தூர்வாருவது தொடர்பாக உள் நோக்கத்துடன் செய்தி வெளியிட்டஜூனியர் விகடன் பத்திரிக்கை மீது நான் தொடர்ந்த வழக்கில் 25 லட்சம் ரூபாயை அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்று டி.ஆர் பாலு தெரிவித்தார்.

உடனடியாக 2009 ஆம் ஆண்டு யார் பிரதமர் தெரியுமா.? என்று அண்ணாமலை கேட்க, மன்மோகன் சிங் என்று கூறிய டி.ஆர்.பாலுவிடம் 2011ல் யார் பிரதமர்.? என்று அண்ணாமலை மறுபடி கேள்வி எழுப்பியதால் சற்று டென்சனான டி.ஆர் பாலு தரப்பு, இதெல்லாம் ஒரு கேள்வியா.? உங்களுக்கு தெரியாதா.? இதற்கும் வழக்கிற்கும் என்ன சம்மந்தம் எனக் கேள்வி எழுப்பினார்.

நான் மறந்து விட்டேன் அது தான் கேட்டேன் 2011ல் யார் பிரதமர்.? என்று அண்ணாமலை மீண்டும் கேட்டதால் மன்மோகன் சிங் என்று கூறிய டி.ஆர்.பாலு, அண்ணாமலை அவரது மனைவியின் பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்து இருப்பதாக கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அது தொடர்பாக அண்ணாமலை அடுக்கடுக்காக எழுப்பிய எந்த ஒரு கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல் தெரியாது என்பதையே தெரிவித்த டி.ஆர்.பாலு, தான் அவசர வேலையாக டெல்லி செல்ல வேண்டும் என்று அனுமதி கேட்டதால் குறுக்கு விசாரணை வேறு ஒரு நாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. டி.ஆர்.பாலு வேக வேகமாக தனது வழங்கறிஞர்களுடன் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை , எனது மனைவி பெயரில் நான் சொத்துக்கள் வாங்கி குவித்திருப்பதாக கூறிய டி.ஆர் பாலுவிடம், தான் எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் அவரிடமிருந்து தெரியாது என்பதே ஒற்றை பதிலாக வந்ததாக தெரிவித்தார். டி.ஆர் பாலு மீது அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் அவரை விட போவதில்லை என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“இன்று போய் நாளை வா...” அண்ணாமலை கேள்வி அதிர்ந்த டி.ஆர்.பாலு.. காரணம் என்ன தெரியுமா?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies