RECENT NEWS

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

Mar 07, 2026

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு

Mar 07, 2026

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!

Feb 12, 2026 12:57 PM

347

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!

அண்மையில் நேர்காணல் ஒன்றில் நடிகர் சிவக்குமாரும், நடிகை ராதிகாவும் பங்கேற்றனர். அப்போது நடிகர் சூர்யாவின் காதல், மற்றும் திருமணம் குறித்து அவர்கள் இருவரும் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

"உயிரிலே கலந்தது" திரைப்படத்தில் சூர்யா நடிக்கும் போது அவர் யாரிடம் பேசாமல், அதிகமாக வெட்கப்படுவார் என கூறிய ராதிகா, நான் தான் சூர்யாவிடம் சொன்னேன், இப்படி இருக்கக் கூடாது சூர்யா, நல்லா சிரிச்சு பேசணும், ஹீரோயின் ஜோதிகாகிட்ட நல்லா பேசு சூர்யா என சொன்னேன் என சிரித்தபடி கூறினார்.

அப்போது பக்கத்தில் இருந்த சிவக்குமார், "அவங்க ரெண்டு பேரையும் சேர்த்து வச்ச அயோக்கிய பெண் இவங்க தான்.. சூர்யா சிவனேனு இருந்துருப்பான், பேசு பேசுனு உசுப்பேத்தி விட்டு, இப்போ பாருங்க" என சொன்னவுடன் அரங்கமே சிரித்தது.

"சூர்யா நடித்த படங்களில் அவர் கதாநாயகியோடு நெருக்கமாக இருந்த மாதிரி காட்சிகள் வந்தது இல்லை, ஆனால் நான் எத்தனை ஹீரோயின் மீது ரோல் ஆனேன் என்று எனக்கே தெரியாது, அந்த அயோக்கியதனத்தை எல்லாம் நான் தான் பண்ணியிருக்கேன்" என சிவக்குமார் சூர்யாவை பாராட்டினார்.

அப்போது பேசிய ராதிகா, தான் சித்தி சீரியலில் நடித்துக் கொண்டிருந்தபோது சூர்யாவும் ஜோதிகாவும் தீவிரமாக காதலித்து வந்தார்கள், அப்போது சிவக்குமார் அதெல்லாம் அப்படி பண்ணக் கூடாது என ஸ்ட்ரிக்ட்டாக, சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னதாகவும், விடுங்க அண்ணா என நான் சூர்யாவிற்கு சப்போர்ட் செய்ததாகவும் கூறியுள்ளார்.

சூர்யா தனக்கு போன் செய்து, அக்கா அப்பா என்ன சொல்லுறாங்க என கேட்பார். அதற்கு அவர் தான் பாட்டு பாடிக்கிட்டே இருக்கிறாரே என்று நான் சொல்வேன். ஆனால் ஒரு விசயம் சூர்யா தனது காதலில் விடாப்பிடியாக நின்றார் என ராதிகா தெரிவித்தார்.

தனது மகன் நான்கு வருடமாக ஜோதிகாவை காதலித்தான், நான் நடித்த 150 படங்களில் காதலித்து திருமணம் செய்வது போல நடித்திருப்பேன் அப்போதெல்லாம் "உங்க சொத்தை நம்பி நான் கல்யாணம் பண்ணல, என் உழைப்ப நம்பி தான் கல்யாணம்" என டயலாக் எல்லாம் பேசி 150 படம் நடித்தவன், எப்படி ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணுறப்போ வேண்டாம்னு சொல்ல முடியும், அதனால் அமைதியாகிவிட்டேன். எனது மனைவி ஆரம்பத்தில் சம்மதிக்கவில்லை என்றாலும் பின்னர் மனம் மாறிவிட்டார் என சிவக்குமார் தெரிவித்தார்.

சூர்யாவும் திருமணம் என்று நடந்தால் அது ஜோதிகாவுடன் மட்டும் தான் என்று உறுதியாக நின்றுவிட்டான். அதனால் இது உண்மையான கேஸ் போல என நினைத்து, சல்யூட் அடித்து சம்மதம் தெரிவித்தேன் என்றும் சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

இந்தியாவுக்கு 30 நாட்கள்  அவகாசம் விதித்த அமெரிக்கா...இஸ்ரேல் - ஈரான் போர் தீவிரம்..!  பற்றி எரியும் மத்திய கிழக்கு நாடுகள்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies