BIG STORIES
சர்வே எடுத்த த.வெ.க.. தடுத்து விரட்டிய தி.மு.க... தேர்தல் அனல்.. தெறி..! விசிலை பறித்த கவுன்சிலர் ஏன்?
Feb 11, 2026 07:44 AM
44
சர்வே எடுத்த த.வெ.க.. தடுத்து விரட்டிய தி.மு.க... தேர்தல் அனல்.. தெறி..! விசிலை பறித்த கவுன்சிலர் ஏன்?
சென்னை துறைமுகம் தொகுதியில் யாருக்கு செல்வாக்கு ? என்று வீடு வீடாக சர்வே எடுக்க சென்ற தவெகவினரை போலீசார் முன்னிலையில் தாக்கி விரட்டப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தவெகவினர் தாக்கியதாக கூறி 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு..
சென்னை பாரிமுனை அங்கப்பன் நாயக்கன் தெரு பள்ளிவாசல் அருகே காலை 9 மணி அளவில், 5 பெண்கள் உள்பட 10 பேர் தவெக கட்சி துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் துறைமுகம் தொகுதியில் விஜய்க்கு ஆதரவு எப்படியுள்ளது என மக்களிடம் கருத்து கணிப்பு கேட்க சென்றுள்ளனர்.
அங்கிருந்த ஜுஸ் கடையின் முன்பு , தவெக ஆதரவாளர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த திமுக 60வது வட்ட செயலாளர் கவியரசு உட்பட சிலர் காவல்துறை அனுமதி இல்லாமல் கருத்து கணிப்பு நடத்தக் கூடாது என தவெகவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தகவல் அறிந்த துறைமுக பகுதி திமுக செயலாளர் ராஜசேகர் மற்றும் 60வது வட்ட மாமன்ற உறுப்பினர் இசட் ஆசாத் ஆகியோர் 30 பேரை அழைத்து வந்து அங்கிருந்த தவெகவினரை தாக்கியதாக தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், தவெக ஆதரவாளர்களிடம், அரசு அதிகாரிகள் தான் கருத்துக் கணிப்பு நடத்த வேண்டும், பொதுமக்கள் நடத்த சட்டத்தில் விதி இல்லை என தெரிவித்தனர். அதற்கு தாங்கள் பிரச்சாரம் செய்யவில்லை, கருத்துக் கணிப்பு எடுக்க தான் வந்தோம் என கூறிய தவெக ஆதரவாளர்கள், நேற்றைய தினம் போலீசாரிடம் அனுமதி கடிதம் கொடுத்தாகவும், ஆனால் போலீசார் கடிதத்தை வாங்கக்கூட மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் போலீசார், தவெக ஆதரவாளர்களிடம் ஒருமையில் பேசுவதாக அங்கிருந்த பெண்கள் கொந்தளித்தனர். தவெக பெண்களுக்கு எதிர்ப்பாக , சில பெண்கள் முண்டியடித்து சண்டைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் முன்னிலையிலேயே இரு தரப்புக்கும் கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை அங்கிருந்து போக சொல்லி தள்ளிக்கொண்டு சென்றனர்.
இதில் ஜாப்பர் உசைன், மற்றும் 30 வயதான திலீப் ஆகியோர் காயமடைந்தனர். அவர்களுடன் கர்ப்பிணி பெண் ஒருவரும் காயமடைந்ததாக கூறி ஸ்டேன்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
மகளுக்கும், குழந்தைக்கும் எதாவது ஆனால் அதற்கு அந்த கட்சியினர் தான் காரணம் என கர்ப்பிணியின் தாய் தெரிவித்தார்.
70 பேர் சேர்ந்து தாக்கியதாகவும், தளபதிக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்றும் ஒரு பெண் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெகவினர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் த.வெ.க இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் காயமடைந்த தவெகவினரை ஸ்டான்லி மருத்துவனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.
இதற்கிடையே தவெகவினர் சர்வே எடுப்பதாக கூறி எங்கள் வீடுகளுக்குள் புகுந்து செல்போன் நம்பர், ஜிபே நம்பர், ஆதார் நம்பர் கேட்டு தங்களை தாக்கியதாக கூறி 3 பெண்கள் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். இருதரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த மோதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ,
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 21வதுவார்டு திமுக கவுன்சிலர் ஆயுப்கான், குப்பை சேகரிக்க விசில் அடித்து வந்த தூய்மை பணியாளர்களிடம் இருந்த விசிலை வாங்கி விட்டு அவர்களுக்கு சிறிய அளவிலான ஒலிப்பெருக்கியை பொறுத்தினார்.
பின்னர் இரு விசில்களையும் குப்பையில் போட்டு அனுப்பினார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu