BIG STORIES
ஓடையை ஆக்கிரமித்து பங்களா.. பஞ். தலைவர் வீடுகள் இடிப்பு.. கோர்ட் - போலீஸ் பக்கா ஆக்சன்..! போலீசிடம் ஒன்றிய செயலாளர் சவுண்டு
Feb 10, 2026 01:30 AM
14
நீர் நிலையை ஆக்கிரமித்து பங்களா வீடுகள் கட்டிய புகாரில் தாம்பரம் அடுத்த அகரன் தென் ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான வீடுகள் நீதிமன்ற உத்தரவுப்படி இடித்து அகற்றப்பட்டது. அதிகாரிகளுடன் மல்லுக்கட்டியதால் பஞ்சாயத்து தலைவரை போலீசார் அப்புறப்படுத்தினர்.
தாம்பரம் அடுத்த அகரம் தென் ஊராட்சி தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் ஜெகன், இவரும் , இவரது உறவினர்களும் அந்தப் பகுதியில் நீர் நிலையை ஆக்கிரமித்து வணிக வளாகங்களுடன் கூடிய பங்களா வீடுகளை கட்டி இருப்பதாக சந்தானம் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கட்டிடங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு என்று உறுதியான நிலையில் அவற்றை இடித்து அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் வருவாய்த்துறையினர் அவரது வீட்டையும் உறவினர் வீட்டையும் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
இதனை கண்டித்து ஜெகனின் குடும்பத்தினர் கடும் வாக்குவாதம் செய்து உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு கூச்சலிட்டனர். போலீசார் அவர்களை பத்திரமாக மீட்ட நிலையில் போலீசாருடன் மல்லுக்கட்டினர்
வாசலில் நின்று கொண்டு கட்டிடங்களை இடிக்க விடமாடேன் என்று எதிர்ப்பு தெரிவித்த ஊராட்சி தலைவர் ஜெகன் போலீசாரை தாக்கினார். இதையடுத்து அங்கு காவல் பணியில் இருந்த காவல் ஆய்வாளர் சந்துரு தலைமையிலான போலீசார் , ஜெகனை பிடித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்
அடங்க மறுத்த அவரது உறவினர்கள் போலீசாருடன் மல்லுக்கு நின்றதால் அவர்களையும் போலீசார் பிடித்து அப்புறப்படுத்தினர்
தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து விட்டு தான் யார் என்று கட்டபோவதாக கூறிய ஜெகன் தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பரங்கிமலை ஒன்றிய திமுக செயலாளர் ரவி, எப்படி கட்டிடங்களை இடிக்கலாம் ? என்று காவல் ஆய்வாளரிடம் வாக்குவாதம் செய்தார்.
நீதிமன்ற உத்தரவு என்ற காவல் ஆய்வாளரை நோக்கி சிலர் எதிர்ப்பு குரல் எழுப்பினர். அவர்களை தனி தனியாக அடையாளம் கண்டு காவல் ஆய்வாளர் சந்துரு,கேள்வி எழுப்பியதால் அந்த கும்பல் பயந்து அடங்கியது
இந்த சம்பவத்தால் அந்தப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய்துறையினர் ஆக்கிரமிப்பு பங்களாங்களை சல்லி சல்லியாக உடைத்து அகற்றும் பணியை தொடர்ந்தனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu