BIG STORIES
ஜோதிடருக்கு நேரம் சரியில்லை.. பாலியல் வழக்கில் சிக்கியதால் சிறையில் கம்பி எண்ணும் யோகம்..!
Feb 10, 2026 02:41 AM
13
தாயுடன் சென்ற 16 வயது சிறுமிக்கு பரிகாரம் செய்வதாக பாலியல் தொல்லை கொடுத்ததாக பிரபல பரிகார ஜோதிடரை போலீசார் கைது செய்தனர். டிக்டாக் முதல் இன்ஸ்டா ரீல்ஸ் வரை திறமை காட்டிய ஜோதிடர் பாலியல் வழக்கில் போலீசில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தித்தொகுப்பு
பாட்டுக்கு தகுந்தாற்போல கெட்டப் போட்டு , 300 வாட்டர் மிலன் ஸ்டார் போல நடிப்பாற்றலை கொட்டும் இவர் கேரள சமூக வலைதள பங்கங்களில் மிகவும் பரிச்சயம்..!
கேரளா மாநிலத்தில் முராரி ஜோதிஷாலயம் என்ற முகநூல் பக்கத்தில் முராரி தந்திரி என்ற புனை பெயரில் ரீல்ஸ் வீடியோக்களை வெளிட்டு பிரபலமானவர் கொல்லம் வெண்டாறு பகுதியை சேர்ந்த ஜோதிடர் ராஜன்பாபு.
தன்னை நாடி வருவோருக்கு இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அவர்களின் வாழ்க்கை விபரங்களை சோழியை உருட்டி தனது உருட்டு பேச்சால் நம்ப வைத்ததாக கூறப்படுகின்றது. தன்னிடம் சிக்கும் ஜோதிட விரும்பிகளிடம் பணம் வசூலித்து யாகம் வளத்து பரிகார பூஜையும் செய்து வந்ததாக கூறப்படுகின்றது
இதை அறிந்த புத்தூர் பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது நோயுற்ற 16 வயது பெண் குழந்தையுடன் ஞாயிற்றுகிழமை மாலை பிரசன்னம் கேட்க முராரி ஜோதிஷால ஆசிரமத்திற்கு சென்றுள்ளார்.
வழக்கம் போல சோழியை உருட்டிய ராஜன்பாபு பரிகார பூஜை செய்தால் நோய் தீர்ந்து விடும் என கூறி அந்த சிறுமியை தனி அறைக்குள் அழைத்து சென்றதாக கூறப்படுகின்றது.
அறைக்குள் சென்ற சற்று நேரத்தில் சிறுமி அலறி சத்தம் போட்டதால் அதிர்ச்சியடைந்த தாயார் ஊரே கூடும் அளவுக்கு கூக்குரலிட்டதால் அச்சமடைந்த ராஜன்பாபு அறையை திறந்து தப்பி சென்றுள்ளார்.
அறையில் இருந்து அழுகை சத்தத்துடன் வெளியே வந்த அந்த சிறுமி ஜோதிடர் ராஜன்பாபு பரிகார பூஜை செய்வதாக கூறி தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக தெரிவிக்கவே அதிர்ச்சியடைந்த தாயார், இந்த சம்பவம் குறித்து கொல்லம் புத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்
புகாரின் பேரில் ஜோதிடர் ராஜன்பாபு மீது போக்சோ வழக்கு பதிவு செய்த கொல்லம் புத்தூர் போலீஸார், செல்போணை சுவிட்ஜ் ஆப் செய்து விட்டு தலைமறைவான ராஜன்பாபுவை தேடி வந்தனர். இந்த நிலையில் பரணிக்காவு பகுதியில் அப்பாட்மென்டில் பதுங்கிய ஜோதிடர் ராஜன்பாபுவை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்
ஜோதிடருக்கு நேரம் சரியில்லாததால் பாலியல் வழக்கில் சிக்கி போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
வாயால் உருட்டி, கட்டங்களை நம்பி பரிகார பாயாசம் விற்று வந்த பாலியல் ஜோதிடர் ராஜன் பாபு சட்டங்கள் கைவிட்டதால் கம்பி எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu