கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
இந்தியா
" நாடாளுமன்றத்தில் பிரதமர் மீது தாக்குதல் நடத்த திட்டம் " சபாநாயகர் ஓம்பிர்லா வெளியிட்ட பரபரப்பு தகவல்
Feb 05, 2026 10:30 AM
137
நாடாளுமன்றத்திற்குள் வைத்து பிரதமர் நரேந்திர மோடி மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கடந்த ஒரு வார காலமாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் உரை மீதான விவாதம் நடைபெற்று வந்தது. ஆனால் சீன ஆக்கிரமிப்பு எனும் புகாரை முன்வைத்து கடந்த ஒரு வார காலமாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வந்தனர்.
இந்த நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி புதனன்று பதில் அளிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன் படி மாலை 5 மணிக்கு நாடாளுமன்ற மக்களவைக்கு வருகை தரும் பிரதமர் மோடி உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி வருவதற்கு முன்னதாகவே காங்கிரசை சேர்ந்த ஜோதிமணி, சுதா உள்ளிட்ட எட்டு பெண் எம்பிக்கள் பிரதமர் நரேந்திர மோடி அமரும் இருக்கைக்கு முன்பாக சென்று நின்று கொண்டனர். அவர்கள் கைகளில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகள் இருந்தன.
பிரதமர் நரேந்திர மோடியின் இருக்கைக்கு முன்பாக பதாகைகளுடன் காங்கிரஸ் பெண் எம்பிக்கள் முழக்கம் எழுப்பி வந்த காரணத்தினால் நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியும் நாடாளுமன்ற மக்களவைக்கு வந்து உரையாற்றவில்லை. குடியரசுத் தலைவர் உரைக்கு பதில் அளிக்க பிரதமர் நரேந்திர மோடி ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை என கேள்விகள் எழுந்தன.
இந்த நிலையில் வியாழனன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் பிரதமரின் பதிலுரை இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடியை புதனன்று பேச விடாமல் தடுக்கும் வகையில் காங்கிரஸ் எம்பிக்கள் செயல்பட்டதாக தெரிவித்தார். ஜோதிமணி, சுதா உள்ளிட்ட காங்கிரஸ் பெண் எம்பிக்கள் எட்டு பேர் வரலாற்றில் இல்லாத வகையிலான சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் திட்டமிட்டதாகவும் இதனை அறிந்தே பிரதமர் மோடியை மக்களவைக்க வரவேண்டாம் என தான் கேட்டுக் கொண்டதாக ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu