தமிழ்நாடு
“என்னது பொண்ணு மாதிரியா.. உன் பொண்ணுகிட்ட அங்க தான் கைவைப்பியா”.? பளார்..! டாஸ்மாக் மதுவால் தறிகெட்ட ஆசாமி
Feb 04, 2026 01:09 AM
9
“என்னது பொண்ணு மாதிரியா.. உன் பொண்ணுகிட்ட அங்க தான் கைவைப்பியா”.? பளார்..! டாஸ்மாக் மதுவால் தறிகெட்ட ஆசாமி
தாம்பரம் பேருந்து நிலையத்தில் தாயுடன் நடந்து சென்ற போது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை மடக்கிப்பிடித்த இளம் பெண் கன்னத்தில் பளார் அறைவிட்டு போலீசில் ஒப்படைத்தார்.
மது குடித்துவிட்டு பட்டப்பகலில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் போதை ஆசாமிக்கு விழுந்த சிறப்பான கவனிப்பு காட்சிகள் தான் இவை..!
சென்னை ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது தாயுடன் பேருந்து மூலம் தாம்பரம் வந்துள்ளார்.
தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து இளம் பெண் தனது தாயுடன் உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக நடந்து சென்றார். அப்பொழுது அருகே நடந்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து சற்றும் தாமதிக்காமல் அந்த இளம் பெண் அந்த ஆசாமியின் கையை தட்டி விட்டு கன்னத்தில் பளார் அறைவிட்டார்
இதையடுத்து அந்த ஆசாமி ஒன்றும் நடக்காதவரை போல பிளாட்பாரத்தில் ஏறி ஒதுக்குபுறமாக நின்று கொண்டார். ஆனால் அந்த பெண் விடவில்லை கன்னம் பழுக்க அடுத்தத்து பளார் அறை விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
மது அருந்தி இருந்ததால் என்ன நடந்ததென்று தெரியவில்லை என்று கூறிய அந்த ஆசாமி நீ என்னோட பொண்ணுமாதிரிம்மா.. என்று நடித்தான், அதற்கு அந்த பெண், உன்னோட பொண்ணுகிட்டயும் இந்த மாதிரி தான் செய்வியா ? எனக்கேட்டு மீண்டும் கன்னத்தில் அறைவிட்டார்
அந்த பெண்ணின் தாயும் திட்டி தீர்த்ததால், தன்னை மன்னித்துக் கொள்ளுபடி கூறிவிட்டு தப்பிச்செல்ல முயன்ற அந்த சில்மிஷ போதையனின், சட்டையை பிடித்து ஓடவிடாமல் தடுத்தார் அந்த இளம் பெண். பின்னர் அங்கு வந்த பெண் போலீசிடம் அவனை ஒப்படைத்தார்
போலீசார் புறக்காவல் நிலையம் அழைத்துச்சென்று தரையில் அமரவைத்திருந்த நிலையில் தன்னை விட்டு விடும் படி கெஞ்சிய அந்த போதையன், ஒரு கட்டத்தில் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிப்பதாக ஒப்புக் கொண்டான். அவனை காரில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
விசாரணையில் அவன் , தாம்பரம் பகுதியில் தங்கி சமையல் வேலை செய்து வரும் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்கதுரை என்பதும், ஊருக்கு செல்வதற்காக டாஸ்மாக் சென்று மது அருந்தி விட்டு பேருந்து நிலையம் வந்ததும் தெரியவந்தது. போதையின் பாதையில் விழுந்து மதுவுக்கு அடிமையாகும் இது போன்ற நபர்களும் பாலியல் குற்றங்கள் அதிகரிக்க காரணமாக இருக்கின்றனர் என்பதே கசப்பான உண்மை.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu