அரசியல்
“தமிழை அழித்த மன்னர்கள்..” திருமாவளவன் கருத்துக்கு ஒற்றை வார்த்தையில் பதிலடி.! பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்
Feb 01, 2026 02:40 AM
90
திருமாவளவன் கருத்துக்கு பதிலடி
சேர, சோழ, பாண்டிய , பல்லவ மன்னர்களால் தான் தமிழ் அழிக்கப்பட்டது என்றும் ராஜராஜன், ராஜேந்திரன் எல்லாம் தமிழ் பெயரா? என்றும் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை கொளத்தூரில் நடந்த முத்துக்குமார் நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்று பேசிய விசிக தலைவர் திருமாவளவன், தான் இலங்கைக்கு சென்று விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை தனிமையில் சந்தித்து பேசியதாக கூறினார். அப்போது அவர் சாதி ஒழிப்புடன் கூடிய தமிழ் தேசியத்தை பிரபாகரன் முன்னெடுத்ததாகவும் அதே கருத்தை பெரியார் கூறியதாகவும் கூறினார். திருமாவளவன், பின்னர் சற்று ஆவேசமாகி நீங்கள் குடி பெருமை பேசக்கூடியவர்கள், ஆண்ட பரம்பரம்பரை என்பவர்கள் எனக்கு எந்த அரசன் மீதும் மதிப்பு கிடையாது என்றும் சேர , சோழ , பாண்டிய, பல்லவ மன்னர்களை கடுமையாக விமர்சித்தார்.
திருமாவளவன் தமிழின் பெருமையை இழக்க செய்து வருவதாக தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்தார்.
“எங்க அண்ணனை முறைச்சா நானே அடிப்பேன்” என்று சில வாரங்களுக்கு முன்பு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், ராஜராஜ சோழன் குறித்து திருமாவளவன் பேசியது குறித்த கேள்வி எழுப்பபட்டது, அதற்கு, ராமசாமி என்ற அவரது தந்தையின் பெயரை எதற்காக அண்ணன் திருமாவளவன் மாற்றி வைத்தார் என்று கேட்ட சீமான், ஈவே ராமசாமி என்பது என்ன? ராமசாமி என்பது சமஸ்கிருத பெயர் தனது பெயரையே மாற்றாத அவர் எப்படி சமூகத்தை மாற்றுவார்? என்றும் கேள்வி எழுப்பினார்
திராவிடம் என்பது எந்த மொழிச்சொல் அது சமஸ்கிருதம் தானே. மனுஸ்ருமிதியில் இருந்து தான் திராவிடம் என்ற சொல்லை எடுத்ததாக கால்டுவெல் சொல்கிறார் என்று சுட்டிகாட்டிய சீமான் எனது பாட்டன் எந்த பெருமையும் தரவில்லையா? அவன் பிழை பட்டுள்ளானா? என்றும் கேள்வி எழுப்பினார்.
வீரத்தின் விளைநிலமாக தமிழகத்தை மாற்றி இன்றளவும் தெய்வங்களுக்கு இணையாகப் போற்றப்படும் தமிழ்நிலமன்னர்கள் குறித்த தொல்.திருமாவளவன் அரைவேக்காட்டுத்தனமான பேச்சு கடும் கண்டனத்திற்குரியது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் நடக்கும் எதற்கும் பாஜக மற்றும் சங்கப் பரிவார் அமைப்புகளைக் குற்றம் சாட்டி வந்த இண்டி கூட்டணி எம்.பி. திருமாவளவன், பத்து நூற்றாண்டுகளுக்கு முன்பு பயணித்து, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை அவதூறாகப் பேசியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ள பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இது சோழர்கள் மற்றும் பாண்டியர்களின் மரபு மற்றும் பெருமைக்கு அவமானம் என்றும் இது திருமாவளவனின் வரலாற்று அறியாமையை மட்டுமே அம்பலப்படுத்துகிறது என்று கூறி உள்ளார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu