BIG STORIES
வைகையில் கொஞ்சம் கண் வைங்கய்யா"..அமைச்சரிடம் கோரிக்கை வைத்த பாப்பையா... கருத்தரங்கில் மனவேதனையைக் கொட்டினார்
Feb 04, 2026 06:29 AM
17
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் மூர்த்தியுடன் பங்கேற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, வைகையில் தண்ணீர் நிலையாக நிற்க வழிவகை செய்ய வேண்டும் என்றும் நீர் நிறைந்த தேம்ஸ் நதி போல வைகை நதியை மாற்ற வேண்டும்
என்றும் அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார்.
மதுரையில் "என் ஊர் என் கனவு 2030" என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய சாலமன் பாப்பையா, வைகை ஆறு இல்லை என்றால் மதுரை உருவாகியிருக்காது என்றார். வைகையாற்றில் நடைபெறும் மணல் சுரண்டல் குறித்தும் கவலை தெரிவித்தார்.
மீனாட்சியம்மன் கோவிலில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதை சுட்டிக்காட்டிய சாலமன் பாப்பையா, மதுரை மாநகரின் மையமான மீனாட்சியம்மன் கோவிலி தண்ணீர் தேங்கி நின்றால் அந்தக் கட்டிடம் என்ன ஆகும் என வேதனையுடன் கேள்வி எழுப்பினார்.
மதுரையின் பேருந்து நிலையங்கள் சத்திரம் சாவடி போல மாறிவிட்டதாகவும் மழைக்காலங்களில் நான்கு புறமும் தண்ணீர் வந்து தேங்குவதாகவும் சாலமன் பாப்பையா கூறினார்.
சாலைகள் தரமற்ற முறையில் அமைப்பது, மீனாட்சியம்மன் கோவிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், என அடுக்கடுக்காக தனது மனதில் இருந்த ஆதங்கங்களை எல்லாம் அமைச்சர் மூர்த்தி முன்பு சாலமன் பாப்பையா கொட்டித் தீர்த்தார்.
இதையடுத்து பேசிய அமைச்சர் மூர்த்தி, தாம் மனதில் நினைத்திருந்ததை எல்லாம் சாலமன் பாப்பையா கூறி விட்டதாகவும், மீனாட்சியம்மன் கோவிலும், அதைத் தொடர்ந்து வைகையாறும் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu