சினிமா
பாகிஸ்தான், அமீரகத்தில் நெட்ஃபிளிக்சில் துரந்தர் திரைப்படம் முதலிடம்
Feb 04, 2026 05:07 AM
8
பாகிஸ்தான், அமீரகத்தில் நெட்ஃபிளிக்சில் துரந்தர் திரைப்படம் முதலிடம்
ரன்வீர் சிங் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி வெளியான அதிரடி உளவுத் த்ரில்லர் திரைபடமான துரந்தர், பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நெட்ஃபிளிக்ஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராகத் திட்டமிடப்படும் பயங்கரவாதச் சதிவேலைகளை முறியடிக்க, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள குற்றக் கும்பல்களுக்குள் ஓர் இந்திய உளவாளி ஊடுருவி நடத்தும் ரகசிய ஆப்ரேஷனைப் பற்றிய அந்த படம், பாகிஸ்தான் மற்றும் வளைகுடா நாடுகளில் வெளியாகவில்லை.
இந்நிலையில், டிஜிட்டல் தளம் மூலம் மக்கள் அங்குள்ளவர்கள் துரந்தர் படத்தை அதிக எண்ணிக்கையில் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் ஆயிரத்து 428 கோடி ரூபாய் வசூல் செய்து, இந்தியத் திரைப்படங்களில் அதிகம் வசூலான நான்காவது படம் என்ற பெருமையை துரந்தர் பெற்றுள்ளது. அதன் இரண்டாம் பாகம் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu