முகப்பு
அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த இ.பி.எஸ்
Feb 04, 2026 07:12 AM
127
அதிமுகவின் 2ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த இ.பி.எஸ்
சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க.வின் 2 ஆம் கட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முதியோர்கள், கைம்பெண்கள் உள்ளிட்டோருக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார்.
அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சமையல் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று இ.பி.எஸ். தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயும், காயமடைந்த வீரர்களுக்கு 2 லட்சம் ரூபாயும், ஜல்லிக்கட்டு நடத்த அரசு 5 லட்சம் ரூபாய் மானியம் வழங்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிறுபான்மையின பெண்கள் மகளிர் சுய உதவிக் குழு மற்றும் சிறு தொழில் தொடங்க வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்றும், மாற்றுத் திறனாளிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அ.தி.மு.க.வின் 2 ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu