BIG STORIES
ரூ.300 கட்டியிருந்தா ரூ.15 லட்சம் கிடைச்சிருக்கும்.. லாரி ஓட்டுனர்களே உஷார்..! e - வாகன் சேவை சொல்றத கேளுங்க..!
Feb 10, 2026 01:34 AM
396
ரூ.300 கட்டியிருந்தா ரூ.15 லட்சம் கிடைச்சிருக்கும்.. லாரி ஓட்டுனர்களே உஷார்..! e - வாகன் சேவை சொல்றத கேளுங்க..!
சென்னை துறைமுகத்தில் லாரி ஓட்டுனர் ஒருவர் லாரி கேபினுடன் கடலுக்குள் மூழ்கி பலியான சம்பவத்தில், 300 ரூபாய் காப்பீட்டு பணம் சேர்த்து செலுத்தாததால் ஓட்டுனருக்கு கிடைக்க வேண்டிய 15 லட்சம் ரூபய் இழப்பீடு கிடைக்காமல் போனதை அடுத்து, இ வாகன் சேவை அமைப்பினர் 2 லட்சம் ரூபாய் சேகரித்து உதவி உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் வானரமுட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரியப்பன். 36 வயது இளைஞரான இவர் சொந்தமாக பழைய டிரைலர் லாரி ஒன்றை வாங்கி ஓட்டி வந்தார்.
சம்பவத்திற்கு முந்தைய நாள் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் இருந்து சென்னை துறைமுகத்துக்கு சரக்கு ஏற்றி சென்றார்.
சம்பவத்தன்று அதிகாலை 1 மணி அளவில் கப்பலில் இருந்து சரக்கு கண்டெய்னரை ஏற்றுவதற்காக அழைப்பு வந்ததும் அசந்து தூங்கிக் கொண்டிருந்த முத்து மாரியப்பன் தூக்க கலக்கத்தில் அவசர அவசரமாக லாரியை கிளப்பி உள்ளார். இதில் எதிர்புறம் கடல் இருப்பதை மறந்து லாரியை இயக்கியதால் லாரியின் முன்பக்க கேபின் உடைந்து கடலுக்குள் விழுந்தது.
இதில் கேபினுடன் கடலில் மூழ்கிய முத்து மாரியப்பன் பரிதாபமாக பலியானர். நீண்ட முயற்சிக்கு பின்னர் தீயணைப்புத்துறையினர் உதவியால், கிரேன் மூலம் லாரி கேபினை மீட்டனர். கேபினுக்குள் இருந்து வெளியேர முடியாமல் சிக்கிக்கொண்டதால் முத்து மாரியப்பன் சடலமாக மீட்கப்பட்டார்.
சென்னை துறைமுக கடலில் இருந்து மீட்கப்பட்ட முத்து மாரியப்பனின் உடலை பிணக்கூறாய்வுக்கு பின்னர் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான முயற்சிகளை இ - வாகன் சேவை அமைப்பினர் மேற்கொண்டனர்.
விபத்தில் சிக்கிய லாரிக்கு 3வது நபர் காப்பீடு மட்டுமே இருந்ததாகவும், அந்த காப்பீட்டில் ஓனர் கம் டிரைவருக்கு உரிய கட்டாய பிரீமியமாக 300 ரூபாய் சேர்த்து செலுத்தி இருந்தால் அவருக்கு தற்போது 15 லட்சம் ரூபாய் காப்பீட்டு பணம் கிடைத்திருக்கும், ஆனால் அவர் அதனை செய்ய தவறியதால் அவருக்கு எந்த ஒரு இழப்பீடும் உடனடியாக கிடைக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதையடுத்து இ - வாகன் சேவை அமைப்பின் உறுப்பினர்கள் 1160 பேர் தலா 199 ரூபாய் செலுத்தி மொத்தமாக 2 லட்சத்து 30 ஆயிரத்து 979 ரூபாய் வசூல் செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ செலவீனங்களுக்கு பணம் செலவிட்ட பின்னர் , 2 லட்சம் ரூபாய்க்காண காசோலையை முத்து மாரியப்பனின் மனைவியிடம் இ - வாகன் சேவை அமைப்பின் தலைவர் கணேஷ்குமார் வழங்கினார்
லாரியோ, காரோ அல்லது வேனோ ஒவ்வொரு சொந்த வாகனம் ஓட்டும் ஓட்டுனர்களும் கட்டாயம் மறக்காமல் காப்பீட்டில் இந்த குறிப்பிட்ட பிரீமியம் தொகையை சேர்த்து செலுத்த வேண்டும் என்றும் அப்படி செலுத்தினால் இது போன்ற விரும்பத்தகாத விபத்துக்களுக்கு இழப்பீடு தொகை கிடைக்கும் எனக்கூறும் இ- வாகன் சேவை அமைப்பினர், சொந்தமாக லாரி வைத்திருக்கும் ஓட்டுனர்களை உடனடியாக லாரிக்கான காப்பீட்டு பாலிசியில் அந்த பிரீமியம் தொகையை சேர்த்து செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.
கடலில் மூழ்கி பலியான ஓட்டுனர் முத்துமாரியப்பனுக்கு மனைவியும் இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர். முத்துமாரியப்பனின் இளைய சகோதரரும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி பலியானது குறிப்பிடதக்கது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu