கோவையில் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டம்
Feb 07, 2026
முகப்பு
நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
Feb 08, 2026 02:30 PM
16
நா.த.க கூட்டத்தில் இடையூறு... த.வெ.கவினரின் கார் மீது தாக்குதல்... 'சாட்டை'யின் பேச்சால் சலசலப்பு
நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் சாட்டை துரைமுருகன் பேசிக் கொண்டிருக்கும்போது விசில் அடித்து இடையூறு செய்ததாக , த.வெ.க நிர்வாகிகளின் காரை நாம் தமிழர் கட்சியினர் சிறைபிடித்து அடித்து உடைத்து மோதலில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் பங்கேற்று பேசினார்
அவர் பேசிக் கொண்டிருக்கும்போது அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் விஜய் கட்சியினர் கூச்சலிட்டவாரே விசில் அடித்தபடி சென்று கொண்டிருந்தனர்.இதனால் த.வெ.க தலைவர் விஜய் குறித்தும் , தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி குறித்தும் துரைமுருகன் மேடையில் கடும் விமர்சனம் செய்து பேசினார்
இந்த நிலையில் அப்பகுதியில் ஐந்து கார்களில் வந்து கூச்சலிட்ட தமிழக வெற்றிக் கழகத்தினரின் கார்களை சிறை பிடித்த நாம் தமிழர் கட்சியினர் அவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு த.வெ.க கட்சியின் நிர்வாகி கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தொடர்ந்து தேனி துணை காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் இருதரப்பையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.. மேலும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது இடையூறு செய்த நபர் குறித்து தேனி நகர் போலீசார் விசாரித்தனர்.
"தேனி மாவட்டத்திற்கு வந்து பாரு" என சாட்டை துரைமுருகன் குறித்து சமூக வலைதளத்தில் கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி த.வெ.க மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி விமர்சனம் செய்திருந்த நிலையில், தற்போது இரு கட்சியினரிடையே இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இதையடுத்து TVK லெப்ட் பாண்டி உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu