ஜனநாயகன் வழக்கு - படத்தயாரிப்பு நிறுவனம் வாபஸ்
Feb 10, 2026
முகப்பு
தேர்தல் வியூகம் குறித்து என்னிடம் விவாதிக்காதது ஏன்? - அண்ணாமலை
Feb 10, 2026 06:02 AM
152
தேர்தல் வியூகம் குறித்து என்னிடம் விவாதிக்காதது ஏன்? - அண்ணாமலை
சட்டமன்ற தேர்தல் பணிகளில் இருந்து அண்ணாமலை விலகியிருப்பதாக எழுந்த புகார் தொடர்பாக ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் விளக்கம் கேட்டதாக தகவல்
சட்டமன்ற தேர்தலில் என்டிஏ வெற்றி பெறுவதற்கான வியூகம் தொடர்பாக என்னுடன் யாரும் விவாதிக்கவில்லை - அண்ணாமலை
முதலில் சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்த என்டிஏவிடம் என்ன வியூகம் உள்ளது? - அண்ணாமலை
வியூகம் பற்றி விவாதிக்காமல் நான் எப்படி களத்திற்கு சென்று அரசியல் செய்ய முடியும்? - அண்ணாமலை
வியூகம் என்ன என்று கூறாமல் என்னை தேர்தல் பணியாற்றுமாறு கூறினால் எப்படி பணியாற்ற முடியும்? - அண்ணாமலை
கமலாலயத்தில் உள்ள கம்ப்யூட்டரில் டைப் செய்து பிரின்டரில் பிரிண்ட்டு எடுத்து கொடுத்தால் மட்டும் போதுமா? - அண்ணாமலை
எந்த வியூகத்தின் அடிப்படையில் 6 தொகுதிகளுக்கு என்னை பொறுப்பாளர்களாக நியமித்தனர்? - அண்ணாமலை
பத்மநாபபுரம் மற்றும் மதுரை தெற்கில் என்னை பொறுப்பாளராக நியமித்ததற்கு என்ன வியூகம் காரணம்? - அண்ணாமலை
வியூகத்தை விளக்கி கூறினால் நான் ஒரு தொகுதியில் கூட பொறுப்பாளராக பணியாற்ற தயார் - அண்ணாமலை
வியூகத்தை கூறாமல் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்கிற தொனியில் என்னை கட்சி அணுகுவது நியாயமா? - அண்ணாமலை
என்னை சட்டமன்ற தேர்தலில் நிற்க வேண்டும் என்கிறீர்கள், தொகுதி பெயரை கூறுங்கள், பணியை தொடங்குகிறேன் - அண்ணாமலை
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு தொகுதியை கூறி என்னை நிற்குமாறு கூறினால் என்னால் எப்படி வெல்ல முடியும்? - அண்ணாமலை
வெற்றிக்கான வியூகத்தை கூறினால் பாஜக மற்றும் என்டிஏ வெற்றிக்காக எந்த பணி கொடுத்தாலும் செய்யத் தயார் - அண்ணாமலை
அண்ணாமலை பேசியதை தொடர்ந்து என்டிஏ மற்றும் தமிழக பாஜகவின் வியூகம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெற்றுள்ளன
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu