RECENT NEWS

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026

BIG STORIES

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

Feb 11, 2026 01:19 PM

61

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..! வேற ஆளாக மாறிய கே.பாக்யராஜ்

பட்டிமன்ற பேச்சாளர் ராஜா.. பெண்ணிடம் சாதி கேட்டாரா.? பரிதவித்து வீடியோ பதிவிட்டார்..!

அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்திற்கு பட்டிமன்ற நிகழ்ச்சிக்காக சென்ற இடத்தில் தனக்கு உணவு பரிமாறிய பெண்ணிடம் பட்டிமன்ற பேச்சாளர் ராஜா சாதி குறித்து கேட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சாலமன் பாப்பையா குழுவினருடன் இணைந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று பட்டிமன்றம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் பங்கேற்று பேசிவருகின்றார் ராஜா. இந்த நிலையில் அமெரிக்காவின் அட்லாண்டா மாகாணத்திற்கு நிகழ்ச்சிக்காக கடந்த 3ந்தேதி தங்கள் குழுவினருடன் சென்றிருந்தார் ராஜா. அப்போது தனக்கு உணவு பரிமாறிய பெண்ணிடம் என்ன சாதி? என்று கேட்டதாக சம்பந்தப்பட்ட பெண்ணின் சகோதரர் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவு வைரலான நிலையில் பட்டிமன்ற ராஜாவுக்கு எதிராக சில நெட்டிசன் போராளிகள் பொங்க தொடங்கினர். இது நாள் வரை அவரை தமிழ் ஆர்வலராக போற்றியவர்கள்கூட கூச்சமே இன்றி இழிவுபடுத்தும் வகையில் கண்டன கருத்துக்களை பதிவிட்டனர்.

இந்த நிலையில் மன ரீதியாக கடுமையான அழுத்தத்திற்கு உள்ளான ராஜா அன்று நடந்தது என்ன? என்பது குறித்து தன்னிலை விளக்கம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனக்காக பல கிலோமீட்டர் தூரத்தில் இருந்து தமிழ் உணவுகளை சமைத்து கொண்டு வந்த காரைக்குடியை சேர்ந்த அயல்நாடு வாழ் தமிழச்சியிடம் எந்த ஊர் என்று கேட்டதாகவும், அதற்கு அவர் காரைக்குடி என்றதும் செட்டிநாடா? என்று கூறியதாகவும் தெரிவித்துள்ள ராஜா, அந்த பெண் செட்டியாரா? என்று சாதி குறித்து கேட்டதாக புரிந்து கொண்டு பதிவிட்டது உண்மையிலேயே மனதிற்கு வேதனையை தருவதாக கூறி உள்ளார்.

எக்காலத்திலும் , எந்த சூழ் நிலையிலும் சாதி குறித்து தான் எங்கேயும் கேட்டதில்லை என்று குறிப்பிட்டுள்ள ராஜா கடவுளறிய நான் அப்படி நடந்து கொண்டதில்லை. அந்த கருத்துகளை புறந்தள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் 1988 ஆம் ஆண்டிலேயே சாதி ஒழிப்பு குறித்து இது நம்ம ஆளு என்று படம் எடுத்து தன்னை ஒரு சாதி ஒழிப்பு போராளியாக காட்டிக் கொண்ட இயக்குனர் கே. பாக்கிராஜ் , கம்மா நாயுடு சங்க கூட்டத்தில் பங்கேற்று, தன் சாதி பெருமை குறித்து தெலுங்கில் பேசி இருக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

''ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்.! காங். விருப்பத்தை நிராகரித்த முதலமைச்சர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies