RECENT NEWS

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

அமெரிக்காவில் சாலை விபத்தில் இந்திய மாணவி மரணம் - ரூ.260 கோடி இழப்பீடு வழங்க சியாட்டில் மாநகராட்சி சம்மதம்

Feb 12, 2026

முகப்பு

சபாநாயகர் அறையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அநாகரீகம்.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமைச்சர்..

Feb 12, 2026 12:23 PM

16

சபாநாயகர் அறையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் அநாகரீகம்.. வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட அமைச்சர்..

சபாநாயகர் ஓம் பிர்லா அறையில் எடுக்கப்பட்ட வீடியோ வெளியீடு

காங்கிரஸ் எம்.பி.க்கள். 25 பேர் கடந்த 5 ஆம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லா அறைக்குள் ஒரே நேரத்தில் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு குற்றம் சாட்டியுள்ளார்.

சபாநாயகர் ஓம் பிர்லாவை காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தரக்குறைவாக பேசியதோடு, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உரையாற்ற அன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி வரும் போது, "என்ன நடக்கும் என்று பாருங்கள்" என பகிரங்கமாக மிரட்டியதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

பிரதமர் மீது தாக்குதல் நடத்தி நாடாளுமன்ற வரலாற்றில் இல்லாத சம்பவத்தை அரங்கேற்ற எதிர்கட்சி பெண் எம்.பி.க்கள் திட்டமிட்டதாக சபாநாயகர் குற்றச்சாட்டியிருந்தார்.

இந்த நிலையில் அன்றைய தினம் இச்சம்பவம் நடந்துள்ளது. இந்த வீடியோவை காங்கிரஸ் பெண் எம்.பி. ஒருவர் தான் எடுத்ததாகவும், எதிர்கட்சிகளின் செயல்பாடுகள் ஜனநாயகத்திற்கு விரோதமானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

"சூர்யா - ஜோ திருமணத்திற்கு இதனால் தான் சம்மதித்தேன்.. அயோக்கிய பெண் ராதிகாவின் வேலை" சிவக்குமார் பகிர்ந்த தகவல்கள்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies