ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலம்
Feb 16, 2026
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலம்
Feb 16, 2026
முகப்பு
ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலம்
Feb 16, 2026 05:12 AM
50
கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. யோக மையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்திற்கு சத்குரு ஜக்கிவாசுதேவ் பல்வேறு அபிஷேக பொருட்களை தூவி பூஜை செய்ததோடு, வில்வ இலைகளை கொட்டி யோகேஸ்வர லிங்க மஹா அபிஷேகம் செய்து பூஜையை துவங்கி வைத்தார்.
ஜோதி பிழம்பான சிவனுக்கு சத்குரு ஜக்கிவாசுதேவ் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்யவும், யோக மையத்தின் பக்தர்கள் தீப்பந்தங்களை சுழற்றி பூஜை செய்தனர்.
ஆதியோகியின் திவ்ய தரிசனம் என்ற தலைப்பில் நடைபெற்ற லேசர் ஷோவில் சிவன் சிலை கண் திறப்பது, பாலாபிஷேகம் செய்து போல பல்வேறு வகையில் ஒளிரூட்டப்பட்டது பக்தர்களை கவர்ந்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் பக்தி இசைப் பாடல்களை பாடினர். அந்த பாடலுக்கேற்ப சத்குரு ஜக்கிவாசுதேவ், ரேம்ப் வாக்கில் சென்று நடனமாடினார்.
விழாவில் பங்கேற்ற நடிகைகள் தமனா, ஸ்ரீநிதி மற்றும் சாரா உள்ளிட்டோரும் உற்சமாக ஆடினர்.
சிவராத்திரி விழாவில் பங்கேற்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், யோகேஸ்வர லிங்கத்திற்கு தீர்த்தம் ஊற்றி பூஜை செய்தார்.
விழாவில் பேசிய அவர், சிவனின் ருத்ரதாண்டவமாக நமது ராணுவம் திகழ்வதாக குறிப்பிட்டார். மஹாராட்டிரா முதலமைச்சர் தேவந்திர பட்னவிஸ், மத்திய அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் ஈஷா விழாவில் பங்கேற்றனர்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu