RECENT NEWS

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Feb 15, 2026

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

பிரான்ஸ் நாட்டில் தொடர்ந்து பெய்த மழையால் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

Feb 15, 2026

தமிழ்நாடு

2 வருட சிறை தண்டனை.. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைதாகாமல் தப்பியது எப்படி ?

Feb 15, 2026 02:13 AM

11

2 வருட சிறை தண்டனை.. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைதாகாமல் தப்பியது எப்படி ?

2 வருட சிறை தண்டனை.. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைதாகாமல் தப்பியது எப்படி ?

தமிழக ஆளுனர் மற்றும் நடிகை குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தியதால் கிருஷ்ணமூர்த்தி, கைது நடவடிக்கையில் இருந்து தப்பினார்.

அரசியலில் இந்த கூட்டம்.. அந்த கூட்டம்... என்ற வரைமுறையில்லாமல் வசவு வார்த்தைகளை ஆபாசமாக பேசுவதில் கட்டுப்பாடற்றவர் என்று எதிர்கட்சியினரால் அடையாளம் காட்டப்படுவர் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி..!

கடந்த 2023 ஆம் ஆண்டு கொடுங்கையூரில் நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி , நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டார். உடனடியாக திமுக தலைமை அவரை கட்சியில் இருந்தும் நீக்கியது.

சிறையில் இருந்து வெளியே வந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஈனி அப்படி பேச மாட்டேன் என்று மன்னிப்பு கடிதம் கொடுத்த சில தினங்களில் மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அன்று பேசியது போலவே தொடர்ந்து தற்போது வரை கூட்டங்களில் எதிர்கட்சியினரை மிகவும் ஆபாசமாக விமர்சித்து பேசிவருவதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் ஆளுனர் மற்றும் நடிகை குஷ்பூ குறித்து ஆபாசமாக பேசிய வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதில் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் 1 வருடம், 2 வருடம், 3 மாதம் என தனி தனியாக சிறை தண்டனை விதிக்கப்பட்டது .அதன்படி ஏக காலத்தில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டது.

இந்த உத்தரவையடுத்து எழும்பூர் நீதிமன்றத்தில் 20 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்திய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தான், மேல் முறையீடு செய்ய இருப்பதாக கூறி கால அவகாசம் கேட்டார். இதையடுத்து இந்த வழக்கில் கால அவகாசம் வழங்கியதோடு, அவரது கைது நடவடிக்கையையும் நீதிபதி நிறுத்தி வைத்தார்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

2 வருட சிறை தண்டனை.. சிவாஜி கிருஷ்ண மூர்த்தி கைதாகாமல் தப்பியது எப்படி ?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies