RECENT NEWS

திருமண நிகழ்வில் தங்க பிஸ்கட் பரிசாக வழங்கப்பட்டதா?

திருமண நிகழ்வில் தங்க பிஸ்கட் பரிசாக வழங்கப்பட்டதா?

Feb 14, 2026

திருமண நிகழ்வில் தங்க பிஸ்கட் பரிசாக வழங்கப்பட்டதா?

திருமண நிகழ்வில் தங்க பிஸ்கட் பரிசாக வழங்கப்பட்டதா?

Feb 14, 2026

தமிழ்நாடு

3 மாத தவணை பெண்டிங்... ஸ்ரீராம் பைனான்ஸ் மிரட்டல்... உடலில் தீவைத்த சம்பவம்..!உடல் வெந்த செங்கல் சூளை அதிபர்

Feb 14, 2026 01:30 AM

7

3 மாத தவணை பெண்டிங்... ஸ்ரீராம் பைனான்ஸ் மிரட்டல்... உடலில் தீவைத்த சம்பவம்..!உடல் வெந்த செங்கல் சூளை அதிபர்

3 மாத தவணை பெண்டிங்... ஸ்ரீராம் பைனான்ஸ் மிரட்டல்... உடலில் தீவைத்த சம்பவம்..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணை நல்லூர் அருகே பெற்ற கடனுக்கு தவணை தொகை செலுத்தாததால் , ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் போலீசாருடன் வந்து ஜேசிபி எந்திரத்தை பறிமுதல் செய்ய முயன்ற போது , கடன் பெற்ற செங்கல் சூளை அதிபர் உடலில் டீசலை ஊற்றி தீவைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன கடன் வசூலிக்கும் ஊழியர்கள் மற்றும் போலீசார் மிரட்டியதால் தீக்குளித்ததாக கூறி ஜேசிபி ஓட்டுனர் கதறிய காட்சிகள் தான் இவை..!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள பெண்ணைவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளர் அப்பாஸ்(45). இவர் திருவெண்ணைநல்லூர் நகர் பகுதியில் உள்ள ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனத்தில் கடன் பெற்று ஜேசிபி இயந்திரம் ஒன்றை வாங்கினார். கடந்த மூன்று மாதங்களாக ஜேசிபி இயந்திரத்திற்கான மாதாந்திர தவணை தொகையை செலுத்தாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சம்பவத்தன்று காலையில் தவணை தொகையை வசூலிக்க வீட்டுக்கு சென்ற பைனான்ஸ் நிறுவன் ஊழியர்களிடம், அப்பாஸ் (45) கால அவகாசம் கேட்டதாக சொல்லப்படுகிறது. கால அவகாசம் கொடுக்க மறுத்த ஊழியர்களுக்கும் அப்பாசிற்கும் இடையே காலையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து காலையில் அங்கிருந்து சென்ற நிதி நிறுவன ஊழியர்கள் மாலை திருவெண்ணைநல்லூர் போலீசார் உடன் அப்பாஸின் வீட்டிற்கு சென்றனர்.

தவணைத் தொகையை தரவில்லையென்றால் ஜேசிபி வாகனத்தை அங்கிருந்து எடுத்துச் செல்வதாக பைனான்ஸ் ஊழியர்கள் கூறியுள்ளனர். அப்போது அப்பாஸை பார்த்து , உன்னை காவல் நிலையம் கூட்டிச் சென்று ரெண்டு தட்டு தட்டினால் எல்லாம் சரியாகிவிடும் என்று போலீசார் மிரட்டியதாகவும், இதனால் மனமுடைந்த அப்பாஸ் அருகில் கேனில் இருந்த டீசலை எடுத்து உடம்பில் ஊற்றிக் கொண்டு தீ வைத்ததாகவும் கூறப்படுகின்றது

இதில் தீக்காயத்துடன் கருகிய நிலையில் பதறிய அவரை மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த அப்பாஸின் உறவினர்கள் கடலூர் திருக்கோவிலூர் சாலையில் பெண்ணைவலம் கிராமத்தின் பேருந்து நிறுத்தத்தில் போலீசாரையும் நிதி நிறுவன ஊழியர்களையும் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அவரது மகன் சாலையில் படுத்துக் கொண்டு எழுந்திருக்க மறுத்து அடம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

உறவினர்களை சமாதானப்படுத்திய போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இரு தரப்பு புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த போலீசார், காலையில் கடன் தொகையை கேட்க சென்ற பைனான்ஸ் நிறுவன ஊழியரின் செல்போனை பறித்து அப்பாஸ் தாக்கியதாகவும், இது குறித்த புகாரின் பேரில் விசாரிப்பதற்காகவே போலீசார் அப்பாஸ் வீட்டுக்கு சென்றதாகவும் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட அப்பாஸ் மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், தங்களை மிரட்டும் நோக்கில் அப்பாஸ் உடலில் டீசலை ஊற்றி தீவைத்துக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

3 மாத தவணை பெண்டிங்... ஸ்ரீராம் பைனான்ஸ் மிரட்டல்... உடலில் தீவைத்த சம்பவம்..!உடல் வெந்த செங்கல் சூளை அதிபர்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies