தொடரும் மழையால் இத்தாலியில் வெள்ளப்பெருக்கு
Feb 14, 2026
முகப்பு
ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம்
Feb 14, 2026 07:10 AM
51
ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அமெரிக்கா தீவிரம்
ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள அமெரிக்க தீவிரமாக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியா பிராந்தியத்தில், அமெரிக்காவின் ஒரு விமானம் தாங்கிக் கப்பல் ஏற்கெனவே நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு விமானம் தாங்கிக் கப்பல் ஈரானை நோக்கி அனுப்பப்பட உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது, ஈரானுக்கு எதிராக வாரக்கணக்கிலான ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதைக் காட்டுவதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
47 ஆண்டுகளாக ஈரான் பேசிக்கொண்டேதான் இருப்பதாகவும், ஏராளமான உயிர்கள் இழந்தாலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை எனவும் டிரம்ப் தனது அதிருப்தியை தெரிவித்தார்.
ஈரான் தலைமையில் விரைவில் நல்ல மாற்றம் ஏற்படும் என்றும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை எட்டத் தவறினால் மிகவும் அதிர்ச்சிகரமான விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் எனவும் டிரம்ப் எச்சரித்தார்.
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu