RECENT NEWS

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

Feb 18, 2026

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

முதியவரின் கடையை எட்டி உதைத்த திருமயம் இன்ஸ்பெக்டர்.. திருச்சி ஐஜி நடவடிக்கை.!

Feb 18, 2026

BIG STORIES

'எவனாவது சாட்சி சொன்னா கழுத்தை அறுத்துருவேன்..' காரில் வந்த கும்பல் அட்டூழியம்..! அரிவாளுடன் பட்டப்பகலில் மிரட்டல்

Feb 18, 2026 01:43 AM

24

'எவனாவது சாட்சி சொன்னா கழுத்தை அறுத்துருவேன்..' காரில் வந்த கும்பல் அட்டூழியம்..! அரிவாளுடன் பட்டப்பகலில் மிரட்டல்

அரிவாளுடன் பட்டப்பகலில் மிரட்டல்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாஜ.க பிரமுகரை ஸ்கார்பியோ காரால் இடித்து தள்ளி கொலை வெறி தாக்குதல் நடத்திய ரவுடி கும்பல் ஒன்று அரிவாளை காண்பித்து பொதுமக்களை மிரட்டிச்சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பட்டபகலில் பொதுமக்களை வீச்சரிவாளை காண்பித்து ரவுடிகள் மிரட்டிச்சென்ற காட்சிகள் தான் இவை..!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் பாஜக மாவட்ட துணைத் தலைவராக இருப்பவர் பாலகணபதி (52) இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ரியல் எஸ்டேட் செய்து வரும் கமுதி கோட்டைமேடு பகுதியை சேர்ந்த முத்துமீரா (45) என்பவருக்கும் , பேரையூர் ஆணையூர் பகுதியில் நிலம் வாங்குவது தொடர்பாக தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. குறிப்பாக சென்னையை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு நிலம் வாங்கி தருவதற்கு முத்து மீரா திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிலத்தை பாலகணபதி பேசி முடித்ததாக கூறப்படுகின்றது.

மேலும் பால கணபதி, தான் பேசி முடித்த சுமார் ஒன்றரை ஏக்கர் நிலத்தை வாங்கி கமுதி பத்திரபதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதற்காக பால கணபதி தனது வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் சென்றார். பத்திர அலுவலகம் எதிரே வந்த போது, திமுக கொடி கட்டப்பட்டScorpio Car -ல் வந்த முத்து மீரா உள்ளிட்ட மர்ம நபர்கள், பாலகணபதி Bike-ல் மோதி அவரை கீழே விழச்செய்ததாக கூறப்பட்டுகின்றது. கீழே விழுந்ததில் உடலில் சிராய்ப்பு காயம், அடைந்த பாலகணபதியை இழுத்துச்சென்று சரமாரியாக கையால் தாக்கினர். இதனை அங்கிருந்த சிலர் செல்போனில் படம் பிடித்தனர்.

இதையடுத்து அந்த காரில் வந்த ரவுடி ஒருவர், காருக்குள் இருந்து வீச்சரிவாளை எடுத்து வந்து, கடை அருகே நின்றிருந்த பொதுமக்களை பார்த்து அரிவாளைக் காட்டி ‘யாரும் சாட்சி சொல்லக்கூடாது’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்து சென்றார்.

முத்துமீரா கும்பல் நடந்திய தாக்குதலில் பாலகணபதி மயக்கமுற்றதால் அவரை அப்படியே சாலையில் போட்டு சென்றனர். இரு சக்கரவாகனத்தை இழுத்து போட்டு காரில் ஏறி புறப்பட்டனர்.

முகமது மீராவை அங்கிருந்து செல்லும்படி அங்கிருந்த சிலர் அனுப்பி வைக்க முயன்ற நிலையில் எவனாவது இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் சாட்சி சொன்னா கழுத்தை அறுத்துருவேன் என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. உஷாரான போலீசார் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட முத்து மீரா தலைமையிலான 6 பேர் கொண்ட ரவுடி கும்பலை கைது செய்ததாக தெரிவித்தனர். முகம்மது மீரா திமுக கட்சியில் இல்லை என்றும் முகமது மீரா எதற்காக திமுக கொடிகட்டி வந்த காரில் வந்தார் என்பது குறித்தும் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

“சாமி கும்பிடும் பெண்களே உஷார்”.. 4 பவுன் தங்க சங்கிலியை அறுத்த திருட்டு சுந்தரி சிக்கினார்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies